விஜய் சிஎம் ஆகிடுவாருன்னு நம்பி படத்தை ரிலீஸ் பண்ணா இப்படியா?.. ரத்னகுமாரின் ‘29’ தப்பிக்குமா?
சென்னை: இயக்குநர் ரத்னகுமார் எந்தளவுக்கு தீவிரமான விஜய் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மாஸ்டர் மற்றும் லியோ படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் அப்டேட் கிங்காகவும் செயல்பட்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
அதிலும், லியோ வெற்றி விழாவில் பேசும் போது அவர் சொன்ன "பருந்து எவ்வளவு தான் உயர பறந்தாலும் பசிச்சா கீழ வந்துதான் ஆகணும்: என பேசியது ரஜினிகாந்த் ரசிகர்களை ரொம்பவே கோபத்தில் ஆழ்த்தியது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் ரத்னகுமார் வேலை பார்க்க முடியாமல் போகவும் அதுதான் காரணம் என பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், அவர் இயக்கத்தில் இன்று வெளியாகவுள்ள '29' படத்துக்கு விஜய்யே வில்லன் ஆவார் என யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன.
'29' இன்று ரிலீஸ்: 'கப்புள் ஃபிரெண்ட்லி' படம் இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றிப் பெற்றது. மேயாத மான் படத்துக்குப் பிறகு '29' படத்தில் லவ் சப்ஜெக்ட்டை கையில் எடுத்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். ரெட்ரோ பட வில்லனா என ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு விது செம ஹேண்ட்ஸமாக இந்த படத்தில் நடித்துள்ளார். அயோத்தி, கிஸ் படங்களை தொடர்ந்து ப்ரீத்தி அஸ்ரானி அழகாக இந்த படத்திலும் உள்ளார். மே 8ம் தேதி இன்று வெளியாகும் 29 படம் ரத்னகுமாருக்கு கம்பேக் படமாக அமையுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
புக்கிங் ரொம்ப டல்: ஆனால், இந்த படம் மே 8ம் தேதி வெளியாவதே தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரியாத அளவுக்கு தமிழ்நாடு அரசியல் களம் அல்லோகலப்பட்டுப் போயுள்ளது. இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் என பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போ செய்தி சேனல்களையே உற்றுநோக்கி வருகின்றனர். ஒரு சில தியேட்டர்கள் ஒரு ஷோ மட்டுமே ஆரஞ்சு நிறத்தில் நம்பிக்கை அளிக்க பல தியேட்டர்களில் பச்சை வண்ணம் மட்டுமே படர்ந்திருக்கிறது.
விஜய் சிஎம் ஆகிடுவாருன்னு நம்பி: சமீபத்தில் அளித்த பேட்டியில் முதலமைச்சராக விஜய் மே 7ம் தேதி பதவி ஏற்றுவிடுவார் என்றும் அவர் பதவி ஏற்றதும் வெளியாகும் முதல் தமிழ் படமே என்னுடைய படமாக இருப்பதில் தனக்கு சந்தோஷம் என விஜய் சிஎம் ஆகிவிடுவார் என்கிற நம்பிக்கையில் ரத்னகுமார் பேட்டி அளித்து வந்ததெல்லாம் தற்போது வீணாகி விட்டது. படம் வெளியான பின்னர் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தால் மட்டுமே 29 படம் தப்பிக்கும் என்கின்றனர். சென்னையில் வேறு மழை பெய்யத் தொடங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications