என்ன வக்கிரமான புத்தி.. இதுக்கு நீ பிச்சை எடுக்கலாம்.. பயில்வானை மறைமுகமாக விளாசிய விஷால்!

சென்னை: ஒரு பெண்ணை பற்றியோ, கதாநாயகி பற்றியோ தவறாக பேசி யூடியூபில் பணம் சம்பாதித்து வருபவர்களை பார்த்தாலே எனக்கு கடுப்பா இருக்கும், இப்படி நீங்க சம்பாதிப்பதற்கு பதிலா கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாம் என்று பயில்வான் ரங்கநாதனை விஷால் மறைமுகமாக திட்டினார்.

தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு ஹரி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி உள்ள திரைப்படம் ரத்னம். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இதில், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி உள்ள இத்திரைப்படம், ஏப்ரல் 26ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஷால், பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

Rathnam Hero Vishal slams Bayilvan Ranganathan

அவருடன் காரணம்: அதில், செல்லமே படத்தில் நான் ஹீரோவாக ஆவேன் என்று எனக்கு தெரியவே தெரியாது. நான் அர்ஜூன் சாரிடம் உதவி இயக்குநராக வேலைபார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது தான் அர்ஜூன் சார், உனக்கு ஸ்கிரீன் பேஸ் நல்லா இருக்குடா போய் நடிடா என்று அப்பாகிட்ட போன் பண்ணி சொன்னாரு அப்படித்தான் நான் ஹீரோவானேன். செல்லமே படத்திற்கு பிறகு நான், சண்டைக்கோழி படத்தில் நடித்தேன், அந்த கதை நடிகர் விஜய் அவர்களுக்காக எழுதிய கதை, அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று தெரிந்ததும். லிங்குசாமி என் நண்பர் என்பதால் அவரிடம் சென்று இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று கேட்டார்.

ஒன்றரை வருடம் காத்திருந்தேன்: அப்போ லிங்குசாமி, இது பெரிய நடிகருக்காக எழுதிய கதை, இது சரியா வருமானு தெரியல கொஞ்சம் வெயிட் பண்ணு என்று சொன்னார். செல்லமே படம் வெளியான போது, லிங்குசாமி இந்த படம் பண்ணலாம் ஆபிஸ் வா என்று சொன்னார். அந்த படத்திற்காக நான் ஒன்றரை வருஷம் காத்திருந்தேன். ஆனால், அந்த படம் பத்து படத்திற்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை அந்த படம் எனக்கு கொடுத்தது. என்னை பட்டி தொட்டி வரை கொண்டு சென்று, என் வாழ்க்கையில் திருப்பு முனையாக அந்த படம் அமைந்துவிட்டது.

பிச்சை எடுக்கலாம்: தொடர்ந்து பேசிய அவர், இணையத்தில் பலர் என்னை ட்ரோல் செய்து வருகிறார்கள். அதைப்பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டது இல்லை. ஆனால், ஒரு பெண்ணை பற்றியோ, கதாநாயகி பற்றியோ தவறாக பேசி சிலர் யூடியூபில் பணம் சம்பாதித்து வருகிறார்கள் அவர்களைப் பார்த்தாலே எனக்கு கடுப்பா இருக்கும். அவங்க வீட்டிலும் பொண்டாட்டி, அம்மா, இருப்பார்கள். அப்படி இருக்கும் போது இன்னொரு பெண்ணை பற்றி பேச எப்படி உங்களுக்கு மனசு வருது என்று தெரியவில்லை. இப்படி நீங்க சம்பாதிப்பதற்கு பதிலா கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாம். இதை அனைவரும் பாராட்டுவார்கள். இப்படி பேசுபவர்களை நான் வக்கிரமான புத்திக்கொண்டவர்கள் என்று தான் சொல்வேன் என்று பயில்வான் ரங்கநாதனை விஷால் மறைமுகமாக திட்டினார்.

பயில்வான் சர்ச்சை பேச்சு: விஷாலும் லட்சுமி மேனனும் காதலித்தார்கள். இருவருக்கும் திருமணம் நடைபெறும் நிலைமை வரை சென்றது. ஆனால் திடீரென்று அவர்களது திருமணம் நின்றுவிட்டது. இதனால் லட்சுமி மேனன் தனது சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்ப சென்றுவிட்டதாக பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசி இருந்த நிலையில் தற்போது விஷால் அவரை கடுமையாக திட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X