திருமணத்தின் மீது ஏன் வெறுப்பு.. முதன்முறையாக மனம் திறந்து பேசிய நடிகர் விஷால்!

சென்னை: தமிழ் சினிமாவில் 40 வயதுக்கு மேலாகியும் முரட்டு சிக்கிளாகவே இருக்கிறார் நடிகர் விஷால். இவர் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26ந் தேதி வெளியாக உள்ள நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் திருமணம் குறித்த கேள்விக்கு முதன்முறையாக மனம் திறந்து பதில் அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், விஷால் உடன் , சமுத்திரக்கனி, யோகிபாபு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

Rathnam Movie Actor Vishal opens up about his marriage

நடிகர் விஷால்: ரத்னம் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் 26ந் தேதி வெளியாக உள்ளது. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். இதில் செய்தியாளர் ஒருவர் விஷாலிடம், முதலில் ஆர்யாவிற்கு திருமணம் நடந்தால் எனக்கு என்றீரகள், பின் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுனு சொன்னீங்க, இப்போ, சல்மான் கான், பிரபாஸ் எல்லாம் இன்னும் கல்யாணம் பண்ணாம இல்லையா என கேட்டு இருக்கீங்க, திருமணத்தின் மீது ஏன் வெறுப்பு... ஏன் அவாய்ட் பண்றீங்க, நாங்க எல்லாம் திருமணம் செய்து கொண்டு நன்றாகத்தானே இருக்கிறோம் என்று கேள்வி எழுப்பினார்.

வெறுப்பு இல்லை: இதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த விஷால், திருமணத்தின் மீது எனக்கு வெறுப்பு இல்லை, ஒரு பெண்ணுடன் வாழ்க்கை முழுவதும் டிரவல் செய்வது சாதாரண விஷயம் கிடையாது, அவங்களுக்கு உணர்வுபூர்வமாக இருக்கணும், அவங்களுக்கான நேரத்தை ஒதுக்கணும், அவங்களுக்கு ஏற்றமாதிரி எல்லாம் இருக்க வேண்டும். இதை நான் முடிவு செய்ய முடியாது, கடவுள் தான் அதை முடிவு செய்ய வேண்டும். அதற்கான சரியான நேரத்தை கடவுள் எனக்கு தருவார் என்று நம்புகிறேன் என்றார்.

நின்று போன திருமணம்: தமிழ் சினிமாவில் செல்லமே என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் நடிகர் விஷால். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் தேர்வு செய்யும் படங்கள் எல்லாம் அடிதடி படங்களாகத் தான் இருக்கும். நடிகர் விஷாலுக்கும் 2019ம் ஆண்டு ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் அவ்வப்போது சில ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு காதல் மழையை பொழிந்து வந்த நிலையில், திடீரென்று இவர்களின் திருமணம் நடைபெறவில்லை.

அதையடுத்து, நடிகை லட்சுமி மேனனுக்கும் - விஷாலுக்கும் திருமணம் செய்து வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால் இப்படி வெளியாகும் இந்த தகவல் பற்றி எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், இது வழக்கம் போல் வதந்தியாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதனை விஷால் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X