ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது.. அவமானமா இல்லையா? விஷால் வேதனை!

சென்னை: ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் படம் இன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக பம்பரமாய் சுழன்று சுழன்று புரொமோஷன் செய்த விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில், கட்டப்பஞ்சாயத்து எந்த பயமோ, வருத்தமோ இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

சிறந்த இயக்குனரான ஹரி கடைசியாக யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக விஷாலை வைத்து ரத்னம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம், இன்று தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.

Rathnam movie actor Vishal s angry tweet

எனக்கே இந்த கதி: இப்படத்திற்காக விஷால் பல இடங்களில் ப்ரோமோஷன் செய்தார். அப்போது, எனிமி, மார்க் ஆண்டனி படத்திற்கு வந்தது போல இந்த படத்திற்கும் சிக்கல் கொடுப்பார்கள் என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போல, ரத்னம் படத்திற்கான விநியோக தொகை பாக்கியை தந்தால் மட்டுமே திருச்சி, தஞ்சையில் படம் வெளியாகும் என அங்குள்ள தியேட்டர் உரிமையாளர் சங்கத்தில் இருந்து எனக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது என்றும், இதுபற்றி பேச முயன்றால் என் அழைப்பை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இப்படி செய்வது கட்டப்பஞ்சாயத்துக்கு சமமானது. எனக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்ளுக்கு என்ன கதியாகும் என வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.

கட்டப்பஞ்சாயத்து: இந்நிலையில், ரத்னம் படம் சற்று நேரத்தில் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஷால் தனது எக்ஸ் தளபக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், இறுதியாக, கட்டப்பஞ்சாயத்து எந்த பயமோ, வருத்தமோ இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. அன்பான TTAREA தியேட்டர் அசோசியேஷன் நண்பர்களே, செயற்குழு உறுப்பினர்களே, கங்காரு நீதிமன்றங்கள் இன்னும் இருக்கிறது என்பதை உறுதி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் என்னைப் போன்ற ஒரு போராளிகளை வீழ்த்த முடியாது.

அவமானமா இல்லையா: சற்று தாமதமானாலும் நிச்சயம் உங்களை நீதியின் மூலம் வீழ்த்துவேன். அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, அவர்கள் வாழ்வாதாரத்திற்காக இங்கு வந்தவர்கள். திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் எடுக்கப்படுவதில்லை என்றும் நான் நம்புகிறேன். மேலும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு நன்றி, நீங்கள் தயாரிப்பாளர்களுக்காக பல சங்கங்கள் வைத்திருப்பது உங்கள் அனைவருக்கும் அவமானம் என்று விஷால் வேதனையை தனது ட்விட்டரில் வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X