Raththam Blue Sattai Review: வண்டி வண்டியா லாஜிக் மிஸ்டேக்... ரத்தம் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கிய ரத்தம் திரைப்படம் நேற்று வெளியானது.
க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ரத்தம் படத்தின் ப்ளூ சட்ட மாறன் விமர்சனம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரத்தம் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
விஜய் ஆண்டனி நடிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கியுள்ள ரத்தம் திரைப்படம் நேற்று வெளியானது. தமிழ்ப் படம் என்ற சீரிஸில் இரண்டு பாகங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் சிஎஸ் அமுதன். Spoof ஜானரில் வெளியான தமிழ்ப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால், விஜய் ஆண்டனியுடன் சிஎஸ் அமுதன் இணைந்த ரத்தம் படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், வண்டி வண்டியா லாஜிக் மிஸ்டேக் உள்ளதாக கூறியுள்ளார். சீரியல் கொலைகளை கண்டுபிடிக்கும் இன்வெஸ்டிகேஷன் திரைப்படமாக ரத்தம் உருவாகியுள்ளதாகவும், இதில் ஹீரோ விஜய் ஆண்டனி இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்ட்டாக நடித்துள்ளதாகவும் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். கொலைகளுக்குப் பின்னணியில் உள்ள மர்மங்களை ஹீரோ கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் கதையாம்.

ஆனால், இதில் ஹீரோ பற்றி இவர் யார் தெரியுமா, சீரியஸ்ஸான, சின்ஸியரான இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்ட் என சொல்கிறார்களே தவிர, அதற்கு எந்த பிளாஷ்பேக்கும் இல்லை. அது நல்லதுதான் என நினைத்தால், அடுத்து ஹீரோவின் மனைவி இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால், அதற்கும் பிளாஷ்பேக்கோ காரணங்களோ இல்லை. அதுவும் நல்லது தான் என நினைத்தால், அங்கேயும் முடியல என கலாய்த்துள்ளார்.
மனைவி இறந்தபின்னர் குழந்தையுடன் கொல்கத்தா செல்லும் ஹீரோ, அங்கு குடியிருக்கிறார் எனப் பார்த்தால், எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கிறார். இத பார்த்தால் கடைசியில் ரசிகர்களுக்கு தான் போதை தலைக்கேறுகிறது. பின்னர் பழைய முதலாளி ஹீரோவை மீண்டும் வேலைக்கு வர சொல்லி அழைத்துச் செல்கிறார். அப்பவும் பத்திரிகை கம்பெனி தான் தலை நிமிருதே தவிர, கதை அப்படியே படுத்துவிடுகிறது, அதோடு நாமும் அப்படியே படுத்துவிடுகிறோம் என பங்கம் செய்துள்ளார்.
அதேபோல், ஹீரோ இன்வெஸ்டிகேஷன் காட்சிகளிலும் சுவாரஸ்யம் இல்லை எனவும், தெருவில் பூ விற்கும் சிறுமியை கொலை செய்ய அமைச்சர் ஒருவர் போலீஸுக்கு 2 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் எடுத்துள்ளார் இயக்குநர். மேலும், ஒரு சர்வரை கடத்த வில்லன் கோஷ்டி கஷ்டப்படுவதாகவும், ஆனால், அதிலிருக்கும் ஹார்ட் டிஸ்க்கை எடுத்துவிட்டால் அதுவே போதும். இதையெல்லாம் கவனிக்காமல் வண்டி வண்டியா லாஜிக்கே இல்லாமல் ரத்தம் படத்தை எடுத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
இருந்தாலும் ரத்தம் படத்தில் இரண்டு காட்சிகள் மட்டுமே ரசிக்கும்படி இருப்பதாகவும், மற்றபடி வேலைக்காகாது என்றும் கூறியுள்ளார். மொத்தமாக தமிழ்ப் படத்தின் மூன்றாம் பாகத்தை, ரத்தம் என்ற டைட்டிலில் எடுத்து வைத்துள்ளார் இயக்குநர் சிஎஸ் அமுதன் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











