ராட்சசன், பேச்சுலர் ஹிட் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

சென்னை: பல ஹிட் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரான டில்லி பாபு உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இவருடைய மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் டில்லி பாபு, இவர் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் முதன்முதலில் பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் நடித்த உறுமீன் திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராக மாறினார். அதைத்தொடர்ந்து மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர், மிரள் மற்றும் கள்வன் என பல தரமான திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

passed away ratsasan

தயாரிப்பாளர் டில்லி பாபு: இதில் கடைசியாக வெளியான மிரள் மற்றும் கள்வன் திரைப்படம் தான் சரியாக போகவில்லையே தவிர மற்ற அனைத்து திரைப்படங்களும் நல்ல வசூலை பெற்றன. இதில் குறிப்பாக விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தது. அடுத்தடுத்து பல இளம் இயக்குநர்களுக்கு உதவி செய்து வந்த இவர், பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தியும் உள்ளார். தனது மகன் தேவ்வை ஹீரோவாக வைத்து வளையம் என்ற பெயரில் படத்தை தயாரித்து வந்துள்ளார். மேலும், மிடில்கிளாஸ், யார் அழைப்பது போன்ற படங்கள் தயாரிப்பில் உள்ளன.

உயிரிழந்தார்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் டில்லி பாபு உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு 12.30 மணி அளவில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 50. கடந்த சில மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சைபலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவரின் திடீர் மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.

டில்லி பாபுவின் உடல் 10.30 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின் மாலை நான்கு மணியளவில் இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் உடலுக்கு திரை பிரபலங்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X