மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி… லால் சலாம் படத்தின் சீக்ரெட் சொன்ன விஷ்ணு விஷால்!

சென்னை: விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் ரஜினியுடன் நடிக்கவுள்ளார் விஷ்ணு விஷால்.

இன்னொரு பக்கம் தனது ஃபேவரைட் இயக்குநருடன் மீண்டும் கூட்டணி வைக்க விஷ்ணு விஷால் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்பார்ப்பில் விஷ்ணு விஷால்

எதிர்பார்ப்பில் விஷ்ணு விஷால்

தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் கமிட் ஆகும் விஷ்ணு விஷால், தற்போது கட்டா குஸ்தி படத்தில் நடித்துள்ளார். டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் கட்டா குஸ்தி தனக்கு கம்பேக் கொடுக்கும் என உறுதியாக நம்புகிறார் விஷ்ணு விஷால். செல்ல அய்யாவு இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, முனிஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

முண்டாசுப்பட்டி, ராட்சசன் வெற்றிக் கூட்டணி

முண்டாசுப்பட்டி, ராட்சசன் வெற்றிக் கூட்டணி

இந்நிலையில், விஷ்ணு விஷால் மீண்டும் தனது ஃபேவரைட் இயக்குநருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியான 'முண்டாசுப்பட்டி' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ராம்குமார் இயக்கியிருந்த இந்தப் படம் காமெடி ஜானரில் ரொம்பவே வித்தியாசமான கான்செப்ட்டில் உருவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து இதே கூட்டணி 'ராட்சசன்' படத்தில் வேற லெவலில் மிரட்டியிருந்தனர்.

மீண்டும் இணைய முடிவு

மீண்டும் இணைய முடிவு

2018ம் ஆண்டு வெளியான 'ராட்சசன்' திரைப்படம் க்ரைம் திரில்லர் ஜானரில் மிரட்டலாக உருவாகியிருந்தது. ரசிகர்களுக்கு திரில்லர் ட்ரீட் மூலம் சிலிர்க்க வைத்த இந்தப் படம், வசூலில் சக்கைப்போடு போட்டதோடு, விஷ்ணு விஷாலுக்கும் செம்ம கம்பேக் கொடுத்தது. இதனையடுத்து ராம்குமார் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்தப் படம் இன்னும் டேக் ஆஃப் ஆகவில்லை என்பதால், மீண்டும் விஷ்ணு விஷாலுக்கு கதை ரெடி செய்துள்ளாராம் ராம்குமார். விஷ்ணு விஷாலும் ஓக்கே சொல்ல, இருவரும் இணையும் இந்தப் படத்தை சத்யஜோதி தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லால் சலாம் சீக்ரெட்

லால் சலாம் சீக்ரெட்

இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்திலும் நடிக்கவுள்ளார் விஷ்ணு விஷால். இந்தப் படத்தின் ஷூட்டிங் சீக்கிரமே தொடங்கும் என சொல்லப்படுகிறது லைகா தயாரிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இதனால், இந்தப் படமும் விஷ்ணு விஷாலுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்துள்ளது. கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால், ஸ்போர்ட்ஸில் சக்சஸ் செய்ய முடியாததால் சினிமாவுக்கு வந்தார். இந்நிலையில், அவரது பெரிய கனவான கிரிக்கெட் வீரர் கேரக்டரிலேயே 'லால் சலாம்' படத்தில் நடிக்க உள்ளதால், ரொம்பவே மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதன் மூலம் லால் சலாம் படம் கிரிக்கெட் பின்னணியில் தான் உருவாகிறது என்பது உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X