அடுத்தபடியாக.. இந்திக்குப் போகும் ராட்சசன்.. நாயகன் குரானா
சென்னை : விஷ்ணு விஷால் , அமலாபால் ,அபிராமி,முனீஸ்காந்த் ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் அக்டோபர் 5 வெளியான த்ரில்லர் படம் தான் ராட்சசன்.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத எத்தனையோ சைக்கோ த்ரில்லர் திரைப்படங்கள் வந்துள்ளன அந்த வரிசையில் ராட்சசன் படத்தையும் சேர்த்து மக்கள் கொண்டாடி தீர்த்தனர்.

முண்டாசுபட்டி என்கிற காமெடி படத்துக்கு பின் இயக்குனர் ராம்குமார் இயக்கிய இந்த படமும் மிக பெரிய வெற்றி அடைந்தது . இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ,முக்கியமாக ஜிப்ரானின் பின்னனி இசை .அது மட்டுமின்றி படத்தில் வில்லன் க்ரிஸ்டோபராக நடித்த சரவணன் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்து இருந்தார்.
தற்போது ராட்சசன் படம் தெலுங்கில் ராக்சசுடு என்ற பெயரில் தயாரிக்க பட்டு வருகிறது .இந்த படத்தில் பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீனிவாஸ் ,அனுபமா பரமேஸ்வரன் மற்றும் தமிழில் அம்மு கதாபாத்திரத்தில் அபிராமி நடித்திருப்பார் ,தெலுங்கிலும் இந்த கதாபாத்திரத்திற்கு அவரே ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்,இதையடுத்து கிரிஸ்டோபர் மற்றும் மேரி ஆகிய இரு கதாபாத்திரங்களில் தமிழில் நடித்த சரவணனே தெலுங்கிலும் நடிக்கிறார்.இந்த படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார்.
மேலும் ராட்சசன் படத்தின் ஹிந்தி உரிமையை விஷ்ணு விஷால் வாங்கியிருந்தார் ,இதனையடுத்து தற்போது ஹிந்தியில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஹிந்தியில் வளர்ந்து வரும் நடிகரான ஆயுஸ்மான் குரானா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டில் குறைந்த நேரத்தில் வளர்ச்சி அடைந்த சில நடிகர்களில் ஆயுஸ்மானும் ஒருவர் .இவரின் ஆர்டிகள் 15 படம் சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பேசப்பட்டது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











