Ammu Abhirami: காதலில் விழுந்தாரா அம்மு அபிராமி.. வெளியிட்ட புதிரான பதிவு!

சென்னை: ராட்சசன் படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றவர் அம்மு அபிராமி, அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே இயக்குநர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் படி இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ammu abhirami cook with comali

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான அம்மு அபிராமி, பைரவா படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன்பின் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து அனைவருக்கும் தெரியும் முகமாக மாறினார். இதன்பிறகு, அம்மு அபிராமிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேசிய விருது பெற்ற அசுரன் படத்தில் தனுஷின் முறைபெண்ணாக நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

ammu abhirami cook with comali

நடிகை அம்மு அபிராமி: துப்பாக்கி முனை, யானை, தண்டட்டி, பாபா பிளாக்‌ஷீப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு கண்ணகி திரைப்படம் வெளியானது. இதில் அம்மு அபிராமி 4 ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். இப்படம் தியேட்டரில் வெளியான கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவரிடம் நிறங்கள் மூன்று, ஜகதாம்பாள், கனவு மெய்ப்பட, குதூகலம்,கோலி சோடா 1.5 என அரை டசனுக்கும் மேல் படங்கள் இவரின் கைவசம் உளளன.

ammu abhirami cook with comali

காதலில் விழுந்த அம்மு: திரைப்படங்கள் மட்டுமில்லாமல், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அம்மு அபிராமி. அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் பார்திவ் மணியை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், இருவரும் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அந்த போட்டோவிற்கு கேப்ஷனாக Happiest Birthday dear, பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் காதலில் இருக்கிறீர்களா என்று கேட்டு வருகின்றனர். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனராக இருந்த பார்திவ் மணி அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி தற்போது சன் டிவி, டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் இயக்குநராக இருக்கிறார்.

ammu abhirami cook with comali
ammu abhirami cook with comali
ammu abhirami cook with comali

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X