Don't Miss!
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு
Recommended Video
சென்னை: ராட்சசன் படத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் இரட்டை விருது கிடைத்துள்ளது. இந்த விருது இயக்குநர், இசையமைப்பாளர்,நடிகர், நடிகையர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரட்டை விருது கிடைத்து பற்றி மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இயக்குநர் ராம்குமார் இது எனக்கு மட்டும் சொந்தமானதல்ல, படத்தில் உழைத்த அத்தனை பேரும் படத்தின் தரத்தை உயர்த்த பெரும் உழைப்பை தந்துள்ளார்கள். அவர்களுக்கு இந்த வெற்றியில் பெரும் பங்குண்டு என்று தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால், அமாலா பால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பராட்டையும் பெற்று, கோலிவுட் மட்டுமின்றி, இந்தியத் திரையுலகமே திரும்பி பார்க்கும் பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இந்திய மொழிகளில் மீண்டும் ரீமேக்காக உருவாகி வரும் இப்படம் தற்போது உலகளவிலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விருது விழாவில் (LATCHA) சிறந்த ஆக்ஷன் திரைப்பட விருதையும், சிறந்த இசைக்கான விருதையும் பெற்றிருக்கிறது.
ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் G.டில்லி பாபு ராட்சசன் திரைப்படம் படைத்திருக்கும் இந்த சாதனை பற்றி தெரிவிக்கும்போது, ராட்சசன் படம் செய்திருக்கும் இந்தச் சாதனை மொத்தப் படக்குழுவையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பாராட்டு படத்தில் பங்கேற்று உழைத்த அத்தனை நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையே சாரும். ராட்சசன் படத்தின் உருவாக்கத்தின் போதே, இப்படம் இத்தகைய சாதனைக்குரியது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.
ஒரு தமிழ்ப்படம் உலகின் மதிப்புமிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றிருப்பது மிகவும் பெருமைமிக்கது. இன்னும் இது போன்ற சிறந்த படைப்புகளை வழங்க இவ்விருது எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது. என்று குறிப்பிட்டார்.
விருது வென்றுள்ள இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறும்போது, இந்த கவுரவம் எனது இயக்குநர் ராம்குமாருக்கும் தயாரிப்பாளர் டில்லி பாபுவுக்கும் மற்றும் என் மீது நிபந்தனையற்ற அனபும் நம்பிக்கையும் கொண்ட அத்தனை பேருக்கும் உரியது.
சாஹோ வெற்றி... மாற்றி யோசித்த மகேஷ்பாபு...இனி மெகாபட்ஜெட் படம்தானாம்
இந்த வெற்றியானது கொண்டாட்டத்தை விட, அதீதமான பொறுப்புணர்வை தந்துள்ளது. இனி எனது இசைப்பயணத்தை மிகுந்த கவனமுடன் ராட்சசன் படத்தினை போன்ற வெற்றிப் பாதையில் அமைத்துக்கொள்ள இவ்விருது உத்வேகம் தந்திருக்கிறது. என்றார்.
இயக்குநர் ராம்குமார் கூறும்போது, உலகளவிலான அங்கீகாரம் ராட்சசன் படத்திற்கு கிடைத்திருப்பது மிகுந்த மரியாதைக்குரியது. இது எனக்கு மட்டும் சொந்தமானதல்ல, படத்தில் உழைத்த அத்தனை பேரும் படத்தின் தரத்தை உயர்த்த பெரும் உழைப்பை தந்துள்ளார்கள். அவர்களுக்கு இந்த வெற்றியில் பெரும் பங்குண்டு. இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மேலும் பெருமை கொள்கிறேன் என்றார்.