சர்வதேச விருதுகளை அள்ளிய ராட்சசன் - ஓராண்டு நிறைவை கொண்டாடும் படக்குழு
சென்னை: ராட்சசன் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதை ஒட்டி ஒன் இயர் ஆப் ராட்சசன் எனும் ஹாஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து படக்குழுவும் இதை கொண்டாடும் நோக்கில் ஒரு போஸ்டரை ரீலிஸ் செய்து மக்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். அதனை பட இயக்குனர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால், நடிகை அபிராமி, ஆகியோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
ராட்சசன் - விஷ்ணு விஷால், அமலாபால், அபிராமி, முனிஸ்காந்த் ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் அக்டோபர் 5ஆம் தேதியன்று வெளியான த்ரில்லர் படம். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத எத்தனையோ சைக்கோ த்ரில்லர் திரைப்படங்கள் வந்துள்ளன.

அந்த வரிசையில் ராட்சசனும் இடம்பிடித்தது என்று சொல்லலாம். முண்டாசு பட்டி என்கிற காமெடி படத்துக்கு பின் இயக்குனர் ராம்குமார் இயக்கிய இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் டெக்னீசின்கள், முக்கியமாக ஜிப்ரானின் பின்னணி இசை.
சினிமாவில் இயக்குநர் ஆக ஆசைப்படும் நாயகன், அதற்காக உண்மை சம்பவங்களை அடிப்படையாய் கொண்டு படம் செய்ய ஆசைப்படுகிறார். வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. போலீஸ் வேலைக்குள் வாழ்க்கை செல்கிறது. நகரில் தொடர்ந்து நடக்கும் ஒரே மாதிரியான கொலைகளை அலசும் ஹீரோ, அந்த சைக்கோ கொலைகாரனை கண்டறிந்து அவனை எப்படி அளித்தார் அவன் சைகோ கொலைகாரனாய் மாற காரணமென்ன, இதுவே ராட்சசன் கதை.

கிட்டத்தட்ட பல சைக்கோ கதைகளில் வரும் கதை போல் இருந்தாலும் படம் எடுக்கப்பட்ட நேர்த்தி, படத்தை மாபெரும் வெற்றி இலக்கை நோக்கி அழைத்து சென்றது. அது மட்டுமின்றி படத்தில் வில்லன் க்ரிஸ்டோபராக நடித்த சரவணன் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்திருந்தார்.
ராட்சசன் வெளியாகி ஒரு வருடம் ஆனதை ஒட்டி ஒன் இயர் ஆப் ராட்சசன் எனும் ஹாஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து படக்குழுவும் இதை கொண்டாடும் நோக்கில் ஒரு போஸ்டரை ரீலிஸ் செய்து மக்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
அதனை பட இயக்குனர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால், நடிகை அபிராமி, ஆகியோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். ராட்சசன் படம் தற்போது லாஸ் ஏஞ்சலஸ் பட விழாவில் 4 விருதுகளை வென்று இருக்கிறது. சிறந்த த்ரில்லர் படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இசை என நான்கு பிரிவின் கீழ் விருதுகளை வென்றுள்ளது அதனையும் ட்ரன்ட் செய்து வரும் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











