சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் விஷ்ணு விஷாலுடன் நடிக்கும் அமலா பால்?
சென்னை: அமலா பால் மீண்டும் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து நடிக்க உள்ளாராம்.
ஆடை படத்தில் துணிந்து நடித்த அமலா பால் பாராட்டுகளை பெற்றதுடன், விமர்சனத்திற்கும் ஆளானார். அந்த படத்தில் ஆடையில்லாமல் நடித்த காரணத்தால் தன்னை விஜய் சேதுபதியின் படத்தில் இருந்து நீக்கியதாக அவர் தெரிவித்தார். மேலும் சில தயாரிப்பாளர்களும் அமலா பாலை ஒதுக்கி வைத்தனர். கோலிவுட்டில் எந்த நடிகையும் தயங்கும் விஷயத்தை அமலா துணிந்து செய்து அனைவரையும் அதிர வைத்தார்.

இந்நிலையில் அமலா பால் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணுவும், அமலாவும் ஏற்கனவே ராட்சசன் படத்தில் சேர்ந்து நடித்தனர். அந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் தேசிய மற்றும் சைமா விருது விழாக்களில் ராட்சசன் புறக்கணிக்கப்பட்டது.
நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் தெலுங்கில் வெளியான ஜெர்சி படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான ஜெர்சி பட ரீமேக்கில் நானி கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷாலும், ஷ்ரத்தா கதாபாத்திரத்தில் அமலா பாலும் நடிக்க உள்ளார்களாம். நிஜத்தில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் விஷ்ணு விஷாலுக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எளிதாக இருக்கும்.
மான்ஸ்டர் படம் புகழ் நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை ரீமேக் செய்கிறார். நடிகர் ராணா தயாரிக்கிறார். விஷ்ணு விஷாலும், அமலா பாலும் நிஜத்தில் நல்ல நண்பர்கள் ஆவர். விஜய் சேதுபதியின் படத்தில் இருந்து அமலா பால் நீக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் விஷ்ணு விஷால்.
ஹிட் ஜோடி மீண்டும் சேர்ந்து நடிக்க உள்ளது. ஜெர்சி ரீமேக் நிச்சயம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்திற்கு அமலா பால் நிச்சயம் சரியானவராக இருப்பார்.
அமலா பால் அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து முடித்துள்ளார். மலையாளத்தில் ஆடுஜீவிதம், தமிழில் கடாவர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடாவர் படம் மூலம் அமலா பால் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











