யார், யாருன்னு எல்லோரும் கேட்ட 'ராட்சசன்' வில்லன் இவர் தான்
Recommended Video

சென்னை: ராட்சசன் படத்தின் வில்லன் யார் என்பதை ஒரு வழியாக தெரிவித்துள்ளனர்.
ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் ஹிட்டாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.
அதே சமயம் அந்த வில்லன் யாருப்பா என்று கேட்காதவர்களே இல்லை.

யார் அது?
ராட்சசன் படத்தில் வில்லன் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. வில்லன் தனது நிஜ முகத்தை அல்லாமல் ரீல் முகத்துடனேயே நடித்து பாராட்டுகளை பெற்றார். விஷ்ணு விஷாலுக்கு போன் செய்து பாராட்டிய ரஜினி கூட யாருப்பா அந்த வில்லன் என்று கேட்டார். அந்த அளவுக்கு அனைவரின் ஆர்வத்தையும் தூண்டிவிட்டார் அந்த வில்லன்.
ராட்சசன்
ராட்சசன் படத்தின் வில்லன் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவரின் பெயர் சரவணன். இயக்குனர் ராம் குமாரின் பிறந்தநாள் அன்று வில்லனின் அடையாளத்தை வெளியிட்டுள்ளனர். படத்தில் நடித்த புதுமுகம் மற்றும் குணச்சித்திர நடிகர்களை அறிமுகப்படுத்த விழா நடத்தி அதில் தான் சரவணனை அறிமுகம் செய்து வைத்துள்ளார் ராம்.

ஆசை
வில்லன் கதாபாத்திரம் செமயாக இருந்ததை பார்த்த விஷ்ணு விஷால் நான் கிறிஸ்டோபராக நடிக்கட்டுமா என்று இயக்குனரிடம் கேட்டுள்ளார். இயக்குனரோ வேண்டாம் சார் அந்த கதாபாத்திரத்திற்கு நான் ஒரு ஆளை தேர்வு செய்துள்ளேன். அவர் பக்காவாக இருப்பார் என்றார். ஆனால் படத்தை பார்த்தபோது அதை விட பக்காவாக இருந்தார் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
நம்ப முடியவில்லையே
சரவணனை நேரில் பார்த்தவர்களால் இவரா கொடூர வில்லன் கிறிஸ்டோபராக நடித்தார், நம்ப முடியவில்லையே என்கிறார்கள். அந்த அளவுக்கு மனிதர் சாந்தமாக உள்ளார். சரவணன் கோலிவுட்டில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துக்கள் சரவணன்.


Click it and Unblock the Notifications











