Ratsasan: சூப்பர் ஹிட்டான போர் தொழில்... அடுத்த ரவுண்டுக்கு ரெடியான ராட்சசன் டீம்... செம்ம ட்விஸ்ட்

சென்னை: கடந்த வாரம் வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ராட்சசன் போல மிரட்டியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விஷ்ணு விஷால் நடிப்பில் 2018ம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தை ராம்குமார் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், ராட்சசன் வெற்றிக் கூட்டணியான விஷ்ணு விஷால், இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைகின்றனர்.

மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி:கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவில் வலம் வந்த விஷ்ணு விஷால், தற்போது லால் சலாம் படத்தில் கிரிக்கெட் பிளேயராக நடித்துக்கொண்டிருக்கிறார். இதுவரை சில ஹிட் படங்களில் நடித்துள்ள விஷ்ணு விஷாலுக்கு, ராட்சசன் படம் தான் மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது. 2018ம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தை ராம்குமார் இயக்கியிருந்தார்.

 Ratsasan: Vishnu Vishal and director Ramkumar reunion after the Ratsasan film

இந்தக் கூட்டணி முதலில் 2014ம் ஆண்டு வெளியான முண்டாசுப்பட்டி படத்தில் இணைந்தது. விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, காளி வெங்கட், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் காமெடி ஜானரில் உருவாகியிருந்தது. ஆனால், அதன்பின்னர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் ராம்குமாரும் இணைந்த ராட்சசன், சைக்கோ திரில்லர் ஜானரில் மிரட்டியது. இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் அமலா பால், அம்மு அபிராமி, முனிஷ்காந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

கோலிவுட் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் சைக்கோ திரில்லர் படமாக ராட்சசன் கொண்டாடப்படுகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் வெளியான போர் தொழில் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.

சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள போர் தொழில் படத்தை பலரும் ராட்சசனுடன் கம்பேர் செய்து பாராட்டி வருகின்றனர். ராட்சசன் படத்துக்குப் பிறகு செம்மையான சைக்கோ திரில்லர் என போர் தொழில் திரைப்படத்தை குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், ராட்சசன் டீம் மீண்டும் இணைவதாக சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முண்டாசுப்பட்டி, ராட்சசன் என தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த இக்கூட்டணி மீண்டும் இணைவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது ராட்சசன் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. விஷ்ணு விஷாலின் 21வது படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X