‘லைப் ஆப் பை’-ன் பாதிப்பை ‘ராவண தேசம்’ உண்டாக்கும்: இயக்குநர் அஜெய் நம்பிக்கை
சென்னை: நியூ எம்பயர் செல்லுலாய்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக லஷ்மிகாந்த தயாரிக்கும் படமான "ராவண தேசம்" இம்மாதம் 14ம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இப்படத்தை எழுதி இயக்கும் அஜெய் தான் படத்தின் கதாநாயகனும். கதாநாயகியாக நடிப்பவர் ஜெனிபர். இவர்களுடன் அல்லலுரமேஷ் ,சந்தோஷ் கௌடில்யா, பாரதிராவ், சிரீஷா, பிரபாகர், மைனர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
கடலில் நடக்கும் கதைக்களம். எனவே, ஆஸ்கார் விருது பெற்ற 'லைப் ஆப் பை' படம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்று இப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என தெரிவித்துள்ளார் அஜெய்.
மேலும், படம் பற்றி அவர் கூறியதாவது...

கடல் கதை...
ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கும் போது தங்களை காத்துக் கொள்ள வேண்டி நடக்கும் போராட்டக்களமே கதை கரு ...கடல் வழியாக தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள படகில் தப்பிக்கும் ஒரு கும்பலின் உணர்ச்சி மிகு போராட்டம் தான் "ராவண தேசம்"

அதே பாதிப்பு....
கடல் மீது நடந்த சம்பவங்களின் தொகுப்பான "லைப் ஆப் பை" எப்படி ஒரு உணர்வு பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தியதோ அதற்க்கு நிகரான பாதிப்பை உணர்வில் பதிக்கக் கூடிய படைப்பாக ராவண தேசம் இருக்கும்.

எல்லாம் கலந்தது....
இதில் காதல் ,எமோஷன்ஸ்,காமெடி,ஆக்ஷன்,பொழுதுபோக்கு என எல்லா அம்சங்களும் இதில் இருக்கிறது.

ரொம்ப கஷ்டம்பா....
தரை மேல படமெடுப்பது கூட ஈசி போல...ஆனா தண்ணி மேல அதாவது கடல் மேல படமெடுப்பது எவ்வளவு கஷ்டம்னு ரொம்பவும் உணர்ந்து விட்டோம்' எனத் தெரிவித்துள்ளார் அஜெய்.


Click it and Unblock the Notifications











