Bigg Boss Tamil 7: அய்யோ முடிஞ்சது சோலி.. ரவீனா மணிக்கு இடையே இப்படியொரு உறவா?.. கதையே மாறுதே!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த முறை யாரையாவது காதல் ஜோடிகளாக மாத்த காத்திருந்த ரசிகர்களுக்கு ரவீனா தாஹா மணிசந்திராவின் இடுப்பில் ஏறி அமர்வதும், கையை கடித்து விளையாடுவதையும் பார்த்து பத்த வச்சிட்டாங்க.. ஆனால், உண்மையில் அவர்கள் இருவரும் காதல் ஜோடிகளே கிடையாது என்கிற தகவல் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

ஆரவ் - ஓவியாவில் ஆரம்பித்த பிக் பாஸ் காதல், கவின் - லாஸ்லியா, அமீர் - பாவனி வரை அட்ராசிட்டி செய்தது. இந்நிலையில் சீசன் 7ல் அப்படி யாராவது சிக்குவார்களா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

Raveena Daha and Manichandra reveals their relationship bonding in Bigg Boss Tamil 7 house

19 வயது இளம் புயலான ரவீனா தாஹாவையும் நடனக் கலைஞர் மணிசந்திராவையும் ஆரம்பத்திலேயே கோர்த்து விட்டு ட்ரோல் செய்யும் அளவுக்கு அவங்களும் கன்டென்ட் கொடுத்திருந்தனர். ஆனால், இப்போ கதையே மாறிடுச்சு என்பது தான் பிக் பாஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக மாறியுள்ளது.

இடுப்பில் எகிறி உட்கார்ந்து: காலையில் லியோ படத்தில் இருந்து நா ரெடி தான் பாடல் முதல் நாளில் போடப்பட்ட நிலையில் காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் இடுப்பில் ஏறி அமர்வது போல ரவீனா தாஹா பாடல் முடிவில் மணிசந்திராவின் இடுப்பில் ஏறி உட்கார்ந்த காட்சிகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. 19 வயதான ரவீனா வெளியே மணிசந்திராவுடன் சுற்றி வந்த போட்டோக்களும் டிரெண்டாகி வரும் நிலையில், இருவரையும் காதல் ஜோடியே என்றே முடிவு செய்தனர்.

Raveena Daha and Manichandra reveals their relationship bonding in Bigg Boss Tamil 7 house

கையை கடித்த ரவீனா: கையில் எழுதி மறைமுகமாக மணிசந்திராவுக்கு ரவீனா காட்டுவது, மணியின் கையை கடித்து விளையாடுவது என எல்லை மீறி செல்கிறார் என பிக் பாஸ் ரசிகர்கள் கம்ப்ளைண்ட் செய்யும் அளவுக்கு இருவரும் சென்ற நிலையில், . மணியின் கையை ரவீனா கடித்து விளையாடுவது, தன்னுடைய லிப்ஸ்டிக் ஒட்டிக் கொண்டதாக அதை எடுத்து கன்னத்தில் தடவி துடைத்தது எல்லாம் ரசிகர்களை காதல் ஜோடி என்றே கதை கட்ட தோன்றியது.

Raveena Daha and Manichandra reveals their relationship bonding in Bigg Boss Tamil 7 house

மணி அண்ணா: இந்நிலையில், அதெல்லாம் கிடையாதுங்க நாங்க அண்ணன் தங்கச்சி தான் என பாசமலர் கதையை புதிதாக ரவீனா ஓட்ட ஆரம்பித்து விட்டார். மணி அண்ணா என திடீரென நேற்று முதல் ரவீனா அழைத்து வருவதை கேட்டு ரசிகர்களே ரவீனா கொய்ங் கொய்ங் குரலில் ஏதாவது பிரச்சனை இருக்கா? என்றே டெஸ்ட் செய்து பின்னர், அவர் மணி அண்ணா என்று தான் அழைக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளனர்.

அடுத்து ஐஷு, அராத்தி, அனன்யா, ஜோவிகா உள்ளிட்டோர் யார் மீதாவது காதலில் விழுகிறார்களா என்பதை வெயிட் பண்ணி பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X