செம அப்டேட்.. மாஸ்டர் படத்துல மாளவிகா மோகனனுக்கு குரல் கொடுத்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா?
சென்னை: மாஸ்டர் படத்தில் நாயகி மாளவிகா மோகனனுக்கு நடிகை ஒருவர் குரல் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
Recommended Video
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் பல தொழில்களை முடக்கி உள்ளது.
சினிமா தொழிலையும் டோட்டல் லாக்டவுன் டோட்டலாக காலி செய்திருக்கிறது.
ஹாலிவுட்டில் தொடங்கி கோலிவுட் வரை பல லட்சம் கோடிகள் சினிமா துறைக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது.

பலத்த நஷ்டம்
சம்மர் ஹாலிடேவை டார்கெட் செய்து தளபதி விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, விக்ரமின் கோப்ரா, ஜெயம் ரவியின் பூமி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், தனுஷின் ஜகமே தந்திரம் என பல படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தன. ஆனால், கொரோனா பரவல் காரணமாக புதுப் படங்கள் ரிலீஸ் ஆகாமல் பல ஆயிரம் கோடி நஷ்டத்தை கோலிவுட்டுக்கு கொடுத்துள்ளது.

தள்ளிப் போன ரிலீஸ்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 9ம் தேதி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருந்தது. தற்போது, மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தீபாவளி வரை தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ரசிகர்கள் மட்டுமின்றி, தியேட்டர் ஓனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலருக்கும் ஏமாற்றம் தான்.

டிரைலர் இல்லை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் தான் ரிலீஸ் ஆகவில்லை டிரைலரையாவது விடுங்கள் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், "Survival first, Celebration Next" என டிரைலர் ரிலீஸ் இல்லை என்பதை இயக்குநர் லோகேஷ் மறைமுகமாக தெரிவித்து விட்டார்.

டப்பிங்
இந்நிலையில், மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு யார் டப்பிங் கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் நடிகையான ரவீனா தான் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு குரல் கொடுத்துள்ளார். முன்னதாக 2.0 படத்தில் எமி ஜாக்சன் உள்ளிட்ட பல ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.
புத்தாண்டு வாழ்த்து
கேரள மாநிலத்தை சேர்ந்த மாளவிகா மோகனன், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் மூலம் அறிமுகமானார். தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். நேற்று விஷு பண்டிகையை கொண்டாடிய மாளவிகா தனது தமிழ் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











