விஷால் 31...முக்கிய வேடத்தில் நடிக்க ரவீணா ரவிக்கு வாய்ப்பு

சென்னை : கடந்த வாரம் விஷால் நடிக்கும் விஷால் 31 படம் பூஜையுடன் சென்னையில் துவங்கப்பட்டது. தேவி 2 படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமான டிம்பிள் ஹயதி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ள நிலையில், ரவீணா ரவி இந்த படத்தில் இணைந்துள்ளதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.

Raveena Ravi joins Vishal’s Vishal 31

இது பற்றி நம்பதகுந்த வட்டாரங்களில் விசாரித்த போது, நடிகையும், டப்பிங் கலைஞருமான ரவீணாவும் இந்த படத்தில் இருப்பதாகவும், அவரை வைத்து 2 நாட்கள் படப்பிடிப்பு கூட நடத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். மேலும் ரவீணா கடைசியாக நடித்த காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் அவரின் நடிப்பு சிறப்பாக இருந்ததால் இந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.

காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஷ்ணுஸ்ரீயின் உதவியாளரான பாலசுப்ரமணியன் தான் விஷால் 31 படத்தில் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக நடிகை தேடிக் கொண்டிருந்த போது விஷ்ணு தான், ரவீணாவின் பெயரை பரிந்துரைத்தாராம். அத்துடன் அவரது நடிப்பை பற்றி தெரிந்து கொள்ள காவல்துறை உங்கள் நண்பன் படத்தையும் பார்க்க சொன்னாராம்.

படக்குழுவினரும் அந்த படத்தை பார்த்து விட்டு, இவரின் நடிப்பை பார்த்து அசந்து விட்டனராம். இந்த படத்தில் 20 நாட்கள் படப்பிடிப்பில் ரவீணா பங்கேற்க உள்ளாராம். தற்போது லாக்டவுன் காரணமாக விஷால் 31 படத்தில் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு பிறகு தான் இந்த படத்தின் வேலைகள் மீண்டும் துவங்கப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Read more about: vishal விஷால்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X