கே.ஜி.எஃப்: சாப்டர் 2 படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கிறாரா? என்ன சொல்கிறார் நடிகை ரவீணா டாண்டன்!

By

சென்னை: கே.ஜி.எஃப்: சாப்டர் 2 படத்தில் தனது கேரக்டர் வித்தியாசமானது என்றும் ரசிகர்கள் எளிதாக அதை கணித்து விடமுடியாது என்றும் நடிகை ரவீணா டாண்டன் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் வெளியாகும் படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 2.

கன்னடத்தில் உருவான 'கே.ஜி.எஃப்' முதல் பாகம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

ஶ்ரீனிதி ஷெட்டி

ஶ்ரீனிதி ஷெட்டி

அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம், உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2 என்ற இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.

ஹோம்பலே பிலிம்ஸ்

ஹோம்பலே பிலிம்ஸ்

பிரகாஷ் ராஜ், ஈஸ்வரி ராவ், மாளவிகா அவினாஷ், ஆனந்த் நாக், அர்ச்சனா, ராமச்சந்திர ராஜூ உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் பிரம்மாண்டமாக இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

சஞ்சய் தத் பங்கேற்பு

சஞ்சய் தத் பங்கேற்பு

முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சஞ்சய் தத் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் அதில் இருந்து முழுவதும் குணமடைந்து இதன் ஷூட்டிங்கில் பங்கேற்றார்

சில காட்சிகள்

சில காட்சிகள்

கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு இதன் ஷூட்டிங், கடந்த அக்டோபர் மாதம் மங்களூரில் மீண்டும் தொடங்கியது. இதற்கிடையே, இந்த படத்தின் டீசர் ஹீரோ யஷ் பிறந்த நாளான ஜனவரி 8 ஆம் தேதி வெளியானது. அந்த டீசர் வெளியான 24 மணி நேரத்திலேயே, யூடியூப்பில் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.

சிக்கலான கேரக்டர்

சிக்கலான கேரக்டர்

இந்நிலையில், இந்தப் படத்தில் ரவீணா டாண்டன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கேரக்டரில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தப் படத்தில் நடித்தது பற்றி நடிகை ரவீணா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நடிகர் யஷ்ஷுடன் நடித்த அனுபவம் சிறப்பானது. அவர் திறமையான நடிகர்.

சொல்ல முடியாது

சொல்ல முடியாது


இந்தப் படத்தில் என் கேரக்டர் வித்தியாசமானது. அதைத் தாண்டி கேரக்டர் பற்றி இப்போது சொல்ல முடியாது. ராமிகா சென் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். சக்தி வாய்ந்த சிக்கலான கேரக்டர். அந்த கேரக்டரை எளிதாக ரசிகர்கள் கணித்து விடமுடியாது.

பிடித்து விட்டது

பிடித்து விட்டது

இந்த கேரக்டரை, பிரசாந்த் நீல் விளக்கிய போதே எனக்குப் பிடித்துவிட்டது. அப்போது 'கே.ஜி.எஃப்' முதல் பாகத்தைப் பார்த்திருக்கவில்லை. பிறகு அந்தப் படத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். சினிமாவில் 'கே.ஜி.எஃப்' புதிய முயற்சி. இயக்குனர் பிரசாந்த், வித்தியாசமான கதைகளை கொண்டவர். இவ்வாறு ரவீணா டாண்டன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X