கோவிலுக்குள் செய்ற காரியமா இது? : கமல் ஹீரோயின் மீது போலீசில் புகார்

கோவிலுக்குள் அழகு குறிப்பு கொடுத்த நடிகை ரவீனா டாண்டன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

By Siva

Recommended Video

கமல் ஹீரோயின் கோவிலுக்குள் செய்த காரியம்!- வீடியோ

பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜா கோவிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார். இந்நிலையில் அவர் கோவிலுக்குள் வைத்து அழகு குறிப்புகள் கொடுத்த வீடியோ வெளியானது.

வீடியோவை பார்த்த கோவில் நிர்வாகம் ரவீனா மீது போலீசில் புகார் அளித்தது.

ரவீனா

ரவீனா

கேமரா கொண்டு செல்ல அனுமதி இல்லாத கோவிலுக்குள் ரவீனா விளம்பர படத்தை ஷூட் செய்துள்ளார். விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

கோவிலுக்குள் வைத்து ரவீனா அழகுக் குறிப்புகள் கொடுக்க அதை ஒருவர் செல்போனில் பதிவு செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதன் பிறகே கோவில் நிர்வாகம் ரவீனா மீது புகார் அளித்தது.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

லிங்கராஜா கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று யாரும் என்னிடம் கூறவில்லை. நான் கோவிலுக்குள் சென்றபோது ரசிகர்கள் என்னுடன் செல்ஃபி எடுத்தனர் என்கிறார் ரவீனா.

மக்கள்

மக்கள்

கோவிலுக்குள் எந்த விளம்பர படமும் எடுக்கவில்லை. என்னை பார்த்த உள்ளூர் மக்கள் என்னுடன் செல்ஃபி எடுத்தனர், வீடியோ எடுத்தனர். அதிகாரிகள் யாரும் அவர்களை தடுக்கவில்லை என்று ரவீனா கூறியுள்ளார்.

ரசிகர்

ரசிகர்

நான் எப்படி அழகாகவும், ஃபிட்டாகவும் உள்ளேன் என்று ஒருவர் கேட்டார். நான் பதில் சொன்னபோது அதை வீடியோ எடுத்தார். அவ்வளவு தான் என்று ரவீனா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X