'கேஜிஎப் சாப்டர் 2' படத்தில் அதிரடியாக இணைந்த மற்றொரு நடிகை... அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு
பெங்களூரு: கேஜிஎப் 2 படத்தின் ஷூட்டிங்கில் இன்னொரு ஹீரோயினும் இணைந்துள்ளார்.
கன்னடத்தில் சில படங்களில் நடித்த, யஷ், ரூபா ஐயர் இயக்கிய சந்திரா படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
இவர் நடித்த 'கே.ஜி.எப்' என்ற படம் கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

இந்தியா முழுவதும்
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானதால் இந்தியா முழுவதும் அறியப்பட்டார் யஷ். இந்தப் படத்தை நடிகர் விஷால் தமிழில் வெளியிட்டார். இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் இன்னும் அதிக பட்ஜெட்டில் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார்.

எதிர்பார்ப்பு
இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற வில்லனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி இதிலும் ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். முதல் பாகத்தை தமிழில் வெளியிட்ட விஷால், இதையும் வெளியிடுகிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆக்ஷன் காட்சிகள்
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் மாதமும் இரண்டாம் லுக் போஸ்டர் கடந்த மாதமும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்க இருக்கிறது. அங்கு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. வில்லன்களுடன் யஷ் மோதும் ஆக்ஷன் காட்சிகள் இதுவரை இல்லாத அளவு படமாக்கப்பட இருக்கின்றன.

ரவீணா டாண்டன்
இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ரவீணா டாண்டன் இணைந்துள்ளார். அவர் நடிப்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில் இப்போது உறுதியாகி உள்ளது. அவரும் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீலும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு படக்குழு இதை உறுதிப்படுத்தியுள் ளது. அவர் நடிக்கும் காட்சிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. ஜூலை மாதம் 5 மொழிகளில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











