பலாத்கார காட்சிகளில் நடிக்க அந்தவொரு கண்டிஷன் மட்டும் தான் போடுவேன்.. கேஜிஎஃப் நடிகை ஓபன் டாக்!

மும்பை: கேஜிஎஃப் 2 படத்தில் ராமிகா சென் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய பிரபல பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்தி சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க தான் போட்ட கண்டிஷன்கள் பற்றி பேசியிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சல்மான் கானின் Patthar Ke Phool படத்தின் மூலம் பாலிவுட்டில் 1991ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான இவர், கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில் ஹீரோயினாக நடித்து இருப்பார்.

பாலிவுட் படங்கள், வெப்சீரிஸ் என இப்போதும் அசத்திக் கொண்டிருக்கும் ரவீணா டாண்டனுக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரவீணா டாண்டன்

ரவீணா டாண்டன்

சல்மான் கான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன், அஜய் தேவ்கன் உடன் தில்வாலே படத்திலும், அமிதாப் பச்சனின் இன்சானியாட், ஷாருக்கான் உடன் சமானா தீவானா என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தியவர். கடந்த 2021ம் ஆண்டு ஆரண்யாக் வெப்சீரிஸிலும் நடித்து ஓடிடி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

ஆளவந்தான் ஹீரோயின்

ஆளவந்தான் ஹீரோயின்

1994ம் ஆண்டு வெளியான அர்ஜுனின் சாது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரவீணா டாண்டன். 2001ம் ஆண்டு பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் டபுள் ஆக்‌ஷனில் நடித்த ஆளவந்தான் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார். அதன் பிறகு தமிழ் படங்களில் அவர் நடிக்கவே இல்லை.

கேஜிஎஃப் 2 ராமிகா சென்

கேஜிஎஃப் 2 ராமிகா சென்

கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான கேஜிஃப் 2 படத்தில் ராமிகா சென் கதாபாத்திரத்தில் இந்திய பிரதமராக நடித்து தனது மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கேஜிஎஃப் 3 படத்திலும் ரவீணா டாண்டன் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

பலாத்கார காட்சிகளுக்கு கண்டிஷன்

பலாத்கார காட்சிகளுக்கு கண்டிஷன்

பாலிவுட்டில் அதிகம் கண்டிஷன் போட்டு நடித்த நடிகையே நானாகத்தான் இருப்பேன் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை ரவீணா டாண்டன் வெளிப்படையாக பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பலாத்கார காட்சியில் ஒரு சில படங்களில் நடித்துள்ளதாகவும், ஆனால், என் டிரெஸ் ஒரு இடத்தில் கூட கிழியவோ விலகவோ கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிட்டு நடித்தேன். அதனாலே என்னை பாலிவுட்டில் ரொம்பவே திமிர் பிடித்தவ என்றனர் எனக் கூறியுள்ளார்.

பிகினிக்கு நோ

பிகினிக்கு நோ

பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பலரும் பிகினி உடைகளில் பல படங்களில் நடித்துள்ளனர். ஆனால், இதுவரை நான் நீச்சல் உடையில் நடித்ததே இல்லை. பிகினி அணிந்து நடிக்க வேண்டும் என்றால் உடனடியாக நோ சொல்லிவிடுவேன். தர் எனும் ஒரு படத்தில் என் ஆடையின் பேக் ஜிப்பை ஹீரோ கழட்டுவது போல ஒரு காட்சி இருக்கும் அதை கழட்டியதும் என் உள்ளாடையின் ஸ்ட்ராப் தெரியும். அந்த காட்சியில் நடித்ததே எனக்கு ரொம்ப கூச்சமாக இருந்தது. அதன் பின்னர் அது போன்ற காட்சிகளை கூட தவிர்த்து விட்டேன் என்றார்.

முத்தக் காட்சிக்கு நோ

முத்தக் காட்சிக்கு நோ

தண்டர் தொடை என என்னோட தொடையழகை வர்ணிப்பார்கள், அது எனக்கு சுத்தமா பிடிக்காது. மேலும், ஹீரோக்களுடன் முத்தக் காட்சிகளில் நடிக்க கூட நோ சொல்லிவிடுவேன். பல படங்களில் நான் நடிக்காமல் போனதுக்கு காரணம் கூட நான் போட்ட கண்டிஷன்கள் தான் என பேசிய அவர், சினிமாவில் நடிக்க வந்து விட்டு இப்படியெல்லாம் பண்ணியிருக்கோமே இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலையா என இப்போது நினைத்து சிரிக்கிறேன் என பேசி உள்ளார் ரவீணா டாண்டன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X