twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோடி பிரதமரான பிறகுதான் இப்படிப் பேசுகிறார்! - ஆமிர்கானுக்கு எதிராக ரவீணா டாண்டன்

    By Shankar
    |

    சகிப்புத் தன்மையும் பாதுகாப்பும் இல்லாத இந்திய நாட்டை விட்டே வெளியேறலாம் என் மனைவி யோசனை கூறியதாக ஆமிர்கான் கூறியது இந்திய ஊடகங்களில் பெரும் செய்தியாகிவிட்டது.

    ஏகப்பட்ட விவாதங்கள், பிரதி விவாதங்கள் மீடியாக்களில். திரையுலகப் பிரபலங்கள் தொடர்ந்து ஆமிருக்கு எதிராகவும் ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

    ஆமிர்கான் கருத்துக்கு சல்மான்கான், ஷாரூக் கான் போன்றவர்கள் ஆதரவளித்துள்ளனர். ஆனால் அனுபம் கெர் போன்றவர்கள், 'அதெப்படி ஏழு மாதங்களுக்குள் சகிப்புத் தன்மையும் பாதுகாப்பும் இல்லாமல் போய்விட்டது இந்தியாவில்?' என ஆமிருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இந்த நிலையில் ஆமீர் கானுடன் ஒரு காலத்தில் ஜோடியாக நடித்த ரவீணா டான்டன் தன் பங்குக்கு ஆமிர்கானைச் சாடியுள்ளார். அதில் "நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு கடந்த ஆறேழு மாதங்களாகத்தான் இப்படிப்பட்ட சகிப்புத் தன்மை பற்றிய கருத்துக்களைக் கூறி வருகின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Bollywood actor Aamir Khan has joined his Bollywood peers Shah Rukh Khan and Salman Khan and claimed there is growing intolerance in the country. His former co-star Raveena Tondon has come up with a bold statement in which the actress has criticised those raking up the issue of intolerance ever since Narendra Modi became the Prime Minister of India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X