லாக்டவுன் நேரத்தில் இப்படி நடத்துவது சரியா? இளம் ஹீரோ திருமணத்தை விளாசித் தள்ளிய பிரபல நடிகை!
மும்பை: லாக் டவுன் விதிமுறைகளை மீறி திருமணம் செய்ததாக, அந்த ஹீரோவையும் அவரது குடும்பத்தினரையும் பிரபல நடிகை சாடியுள்ளார்.
Recommended Video
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, அனிதா தம்பதியின் மகன் நிகில் குமாரசாமி.
முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் பேரனான இவர், ஜாக்குவார் என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் சில படங்களில் நடித்துள்ளார்.

பிரமாண்டமாக
இவருக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதிக்கும் திருமணம் பேசி முடித்திருந்தனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தை பிரமாண்டமாக நடத்த தேவகவுடா குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர்.

கொரோனா
இதற்காக ராமநகர் பகுதியில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக திருமண ஏற்பாடுகள் திடீரென நிறுத்தப்பட்டன. ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதால் இந்த திருமணம் நடக்குமா? என்று கேள்வி எழுந்தது. ஆனால் திருமணம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவித்திருந்தனர்.

பண்ணை வீட்டில்
அதன்படி லாக்டவுன் நேரத்திலும், கர்நாடக மாநிலம் பிடாடி பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இவர்கள் திருமணம் நேற்று காலை நடந்தது. இதில் ஹெச்.டி.தேவகவுடா, குமாரசாமி மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சுமார் 80 பேர் வரை இந்த திருமணத்தில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

ரவீணா டாண்டன்
இந்த திருமணத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு, லாக்டவுன் நேரத்தில் திருமணம் நடத்தியதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி நடிகை ரவீணா டாண்டன் கூறும்போது, நாட்டில், பலர் தங்கள் குடும்பத்தினருடன் சேரமுடியாமல் பசியுடன் இருக்கிறார்கள். சிலர் உதவிக்கொண்டிருக்கிறார்கள். இது எதுவும் தெரியாமல் சில ஆத்மாக்கள் இருக்கின்றனர். திருமண விழாவில் என்ன பரிமாறப்பட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என கிண்டலாகக் கூறியுள்ளார் .

பரேஸ் ராவல்
இதற்கு எச்சைக்கையை மீறுதல், சமூக விலகல், விஐபி உரிமை என்ற ஷேக் டேக்குகளை பயன்படுத்தியுள்ளார். பிரபல இந்தி நடிகரான பரேஸ் ராவல், ஊரடங்கை மீறி இப்படி திருமணம் செய்த அவர்களை கர்நாடக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும் மணமக்கள் தங்கள் புதிய வாழ்க்கையின் சில நாட்களை சிறையில் கழிக்கட்டும் என்றும் கூறியுள்ளார். இவர்களைப் போல மேலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











