இயக்குநர் ரவி சோப்ரா மரணம்... மகாபாரத தொடர் தயாரித்தவர்.. குஷ்புவை அறிமுகப்படுத்தியவர்!

By Shankar

மும்பை: மகாபாரதம் தொடரைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ரவி சேப்ரா இன்று மும்பையில் மரணமடைந்தார். இந்திப் பட உலகில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக விளங்கிய இவர்தான் குஷ்புவை அறிமுகப்படுத்தினார்.

பிரபல இயக்குனர் பி.ஆர்.சோப்ராவின் மகன் ரவி சோப்ரா. தந்தையுடன் ஏராளமான படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார்.

நாட்டில் தூர்தர்ஷன் அறிமுகமாகி கோலோச்சிக் கொண்டிருந்தபோது, மகாபாரதம் கதையை டி.வி. சீரியலாக தயாரித்து இயக்கி ஒளிபரப்பினார். இந்த தொடர் 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஒளிபரப்பாகி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. டப்பிங் செய்யப்படாத அந்த கால கட்டத்தில் இந்தியில் மகாபாரதம் அனைத்து மொழி பேசும் மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இயக்கி இருந்தார்.

Ravi Chopra passes away

2006-ம் ஆண்டு தந்தை பி.ஆர்.சோப்ரா மரணம் அடைந்த பின்பு ரவிசோப்ரா மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி பல படங்களை இயக்கினார். கடந்த 2012-ம் ஆண்டு முதல் நுரையீரல் நோயினால் அவதிப்பட்டு வந்தார்.

68 வயதான ரவிசோப்ராவுக்கு நுரையீரலில் புற்று நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மும்பை திரும்பினார். மீண்டும் மும்பை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ரவி சோப்ரா, நேற்று மரணமடைந்தார்.

அவருக்கு மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். அவரது உடல் தகனம் மும்பையில் நேற்று நடந்தது.

இதில் மும்பை பட உலக பிரபலங்கள் பங்கேற்றனர். ரவிசோப்ரா இயக்கிய படங்களில் ஜமீர், தி பர்னிங் டிரெய்ன், ஆஜ்கி ஆவாஸ், மஸ்தூர், தரீஸ், பக்பான், பாபுல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

1980-ல் வெளியான ‘தி பர்னிங் டிரெய்ன்' படம் வெளியாகி இந்தியில் பெரும் வெற்றிப் பெற்றது.

இந்தப் படத்தில்தான் குஷ்பு நடிகையாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 10.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X