அண்ணனுக்காக நயன்தாராவுடன் மோதிய ஜெயம் ரவி
சென்னை: ஜெயம் ரவி தான் நடித்து வரும் படத்தில் நயன்தாராவுடன் மோதும் காட்சியில் நடித்துள்ளார்.
ஜெயம் ரவி தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆக்ஷன் நாயகி
ஜெயம் ரவி படத்தில் நயன்தாரா மரத்தை சுற்றி சுற்றி வந்து காதல் பாட்டு மட்டும் பாடிவிட்டு செல்ல மாட்டாராம். மாறாக அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறாராம்.

ரவி, நயன் மோதல்
படத்தில் ஒரு சண்டை காட்சியை படமாக்கியுள்ளனர். அந்த காட்சியில் வெறியோடு மோதியவர்கள் வேறு யாரும் இல்லை ஹீரோ ரவியும், ஹீரோயின் நயன்தாராவும் தான். போங்க ரவி, இப்படி நயன் கூடவா ஆக்ரோஷமாக மோதுவது.

ஆதிபகவன்
முன்னதாக ஆதிபகவன் படத்தில் நீத்து சந்திராவுடன் மோதும் காட்சியில் நடித்த அனுபவம் நயன்தாராவுடன் மோதும் காட்சியில் உதவியாக இருந்ததாம் ரவிக்கு.

நயன்தாரா
இது கதிர்வேலன் காதல் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து நயன்தாரா மகிழ்ச்சியில் உள்ளார். மீண்டும் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நண்பேன்டா படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











