Amala Shaji: போச்சு.. எல்லாம் போச்சு.. வசமாக சிக்கிய அமலா ஷாஜி.. காவல் துறை எச்சரிக்கை!

சென்னை: கேராளவை சேர்ந்த நடிகைகளுக்கு மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் மாடல்களுக்கும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்திக் கொண்டு தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ளார் அமலா ஷாஜி. ரீல்ஸ் வீடியோக்களால் டிரெண்டாகி வரும் அமலா ஷாஜி சில படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பண மோசடியில் அவர் ஈடுபட்டதாக அடுக்கடுக்கான புகார்கள் குவிந்துள்ளன.

ஒரு மணி நேரத்தில் குறைந்த தொகை கொடுத்தால் பல மடங்கு அதிகரித்து தருகிறேன் எனக் கூறி அமலா ஷாஜி பண மோசடியில் ஈடுபட்டார் என இளைஞர் ஒருவர் அளித்த பேட்டி பகீர் கிளப்பி இருந்தது. இந்நிலையில், ரவி ஐபிஎஸ் அமலா ஷாஜியின் பண மோசடி குறித்து பேசிய வீடியோ தீயாக பரவி வருகிறது.

Ravi IPS shares a alert message after Amala Shaji scam exposed

இன்ஸ்டாகிராம் பியூட்டி: நடிகைகளுக்கு இணையாக இன்ஸ்டாகிராமில் பல பிரபலங்கள் அதிகமான ஃபாலோயர்களுடன் அசத்தி வருகின்றனர். சீரியல் நடிகை, டிக் டாக் பிரபலங்கள் என பெண்களை பல இளைஞர்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில், அதை பயன்படுத்தி அவர்கள் பக்காவாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் லட்சக் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

அரைகுறை ஆடையுடன் வீடியோ: அதிகப்படியான இளைஞர்களை ஃபாலோயர்களாக மாற்ற அரைகுறை ஆடைகளை அணிந்து மாடல்கள் மற்றும் டிவி சீரியல் நடிகைகள் தொடர்ந்து போஸ்ட் போடுவதற்கு காரணமே அதிக ரசிகர்களை கவர்ந்த பின்னர் அவர்களிடம் விளம்பரங்களை கொண்டு சென்று பணம் சம்பாதிப்பது தான் லட்சியம். அப்படி பிரபலமானவர்களில் ஒருவர் தான் கேரளாவை சேர்ந்த அமலா ஷாஜி.

பேராசை: ஒரு மணி நேரத்தில் 1000 ரூபாய் கொடுத்தால் 10000 ரூபாய் தருகிறேன் என்றும் 15 ஆயிரம் கொடுத்தால் 55 ஆயிரமாக தருகிறேன் என Crypto World மற்றும் Ananya Forex என புதுசு புதுசா பணத்தை பல மடங்கு ஆக்கித் தருகிறேன் என ஆசைக் காட்டி மோசம் செய்து விட்டார் அமலா ஷாஜி என Advocate Vignesh Muthukumar யூடியூப் சேனலில் அந்த இளைஞர் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞர் விக்னேஷ் முத்துகுமார் தன்னுடைய யூடியூப் சேனலில் அந்த இளைஞரின் வாக்குமூலத்தை அப்படியே வீடியோவாக வெளியிட்டார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமலா ஷாஜி கைது?: அமலா ஷாஜி பணத்தை வாங்கிக் கொண்டு எந்தவொரு ரெஸ்பான்ஸும் செய்யவில்லை என்றும் மேலும், மேலும் டெக்னிக்கல் கோளாறு என தன்னிடம் பணத்தை பிடுங்கவே பார்த்தார் என்றும் அந்த இளைஞர் புலம்பித் தீர்த்துள்ளார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அமலா ஷாஜியிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸ் அதிகாரி ரவி ஐபிஎஸ் அந்த மோசடியில் அமலா ஷாஜியும் சிக்கியிருக்கிறார். அவரையே ஏமாற்றித்தான் அந்த கும்பல் பணத்தை சுருட்டியிருக்கிறது எனக் கூறியுள்ளார்.

ரவி ஐபிஎஸ் எச்சரிக்கை: பேராசை பெருநஷ்டம் என்பது சரியான ஒன்று. அதிகமாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என அமலா ஷாஜி போன்ற பிரபலங்கள் சொல்கிறார்களே என நம்பி பணத்தை போட்டு ஏமாந்து போக வேண்டாம் என ரவி ஐபிஎஸ் இளைஞர்களுக்கு எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சைபர் கிரைம் போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்றும் கூறியுள்ளார். பிரபலங்களும் தெரியாத நபர்கள் கொடுக்கும் விளம்பரங்களை பணத்துக்கு ஆசைப்பட்டு வெளியிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X