7 ஜி ரெயின்போ காலனி படத்தில் நாங்க இரண்டு பேருமே முதல் சாய்ஸ் கிடையாது!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக தனித்துவமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களால் காலதாமதமாக அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது

இந்த நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் முதலில் இரண்டு பேருமே முதல் சாய்ஸ் கிடையாது என்ற தகவலை தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளனர்.

காலதாமதமாக கொண்டாடப்பட்டு

காலதாமதமாக கொண்டாடப்பட்டு

இயக்குனர் செல்வராகவன் திரைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள செல்வராகவன் ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி புதுப் புது கதைகள் இயக்கக்கூடியவர். பொதுவாக செல்வராகவன் திரைப்படங்கள் என்றாலே வெளியாகும் போது ரசிகர்கள் மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பு பெறாது பின் காலதாமதமாக அந்த படங்கள் கொண்டாடப்பட்டு ரசிகர்களின் ஃபேவரைட் படங்களின் பட்டியலில் இடம்பெறும். அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை,ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களை ரசிகர்கள் காலதாமதமாக கொண்டாடப்பட்ட படங்களாகும்

7ஜி ரெயின்போ காலனி

7ஜி ரெயின்போ காலனி

செல்வராகவன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவிகிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் ஜோடியாக நடித்திருப்பர். ரவிகிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமாகி இருப்பார். காதலை இதைவிட அழுத்தமாக யாரும் சொல்ல முடியாது என்று சொல்லுமளவிற்கு 7ஜி ரெயின்போ காலனி மாபெரும் வெற்றி பெற்றது இந்த நிலையில் நடிகர் ரவிகிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் இணைந்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில் 7ஜி ரெயின்போ காலனியில் நாங்கள் இருவருமே முதல் சாய்ஸ் கிடையாது என கூறியுள்ளனர்

சூர்யா அல்லது மாதவன்

சூர்யா அல்லது மாதவன்

7 ஜி ரெயின்போ காலனி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் சூர்யா அல்லது மாதவன் தானாம். அப்பொழுது சூர்யா பிதாமகன் மற்றும் காக்க காக்க உள்ளிட்ட படங்களில் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். மாதவனும் பிரியமான தோழி படத்தில் மிக பிஸியாக இருந்ததால் இருவரும் 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் நடிக்க முடியாமல் போனது.

ரவி கிருஷ்ணா ஹீரோவாக

ரவி கிருஷ்ணா ஹீரோவாக

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் செல்வராகவனிடம் யாரை ஹீரோவாக போடலாம் என கேட்டதற்கு யாரையாவது புதுமுகங்களே தான் போட வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்பொழுது தயாரிப்பாளர் ஏஎம் ரத்னத்தின் மகனான ரவி கிருஷ்ணா செல்வராகவன் நினைவிற்கு வந்துள்ளார். எனவே ரவி கிருஷ்ணாவை நடிக்க வைக்கும்படி ஏ எம் ரத்னத்திடன் செல்வராகவன் கேட்டுள்ளார். அப்போது கொஞ்சம் குண்டாக இருந்த நடிகர் ரவி கிருஷ்ணா 7 ஜி ரெயின்போ காலனி படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார்.

படத்திலிருந்து விலகி விட்டாராம்

படத்திலிருந்து விலகி விட்டாராம்

ரவி கிருஷ்ணாவை தொடர்ந்து நடிகை சோனியா அகர்வாலும் இந்த படத்தில் முதல் சாய்ஸ் கிடையாது. முதலில் ஸ்வாதி தான் கதாநாயகியாக நடித்தாராம். 20 நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகு படிக்க வேண்டும் என ஸ்வாதி படத்திலிருந்து விலகி விட்டாராம். இந்த நிலையில் அப்பொழுது தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் இயக்கத்தில் உருவாக தயாரிப்பில் உருவாகி கொண்டிருந்த கோவில் படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார் அந்த சமயம் பார்த்து கோவில் படத்தின் கடைசி காட்சி படமாக்கப்பட்டது.

முதல் சாய்ஸ் கிடையாது

முதல் சாய்ஸ் கிடையாது

இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் சோனியா அகர்வாலை இந்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். இவ்வாறு தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படமாக உள்ள 7 ஜி ரெயின்போ காலனி ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் முதல் சாய்ஸ் கிடையாது என்ற அரிய தகவலை இருவரும் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X