Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வைபவ், கருணாகரனால் நடிகருக்கு நேர்ந்த சோகம்: இப்படியுமா செய்வாங்க?
சென்னை: காட்டேரி படத்தில் நடித்த போது தனக்கு நடந்த சோகம் குறித்து தெரிவித்துள்ளார் ரவி மரியா
யாமிருக்க பயமே படம் புகழ் டீகே இயக்கியுள்ள படம் காட்டேரி. வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா என 3 ஹீரோயின்கள்.
இந்நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது படத்தில் காமெடி செய்துள்ள ரவி மரியா கூறியதாவது,

ஏமாற்றம்
அனைவருக்கும் சோக வணக்கம். என்னடா சோக வணக்கம் என்று சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா?. நான் ஏமாந்து போய் இந்த படத்தில் நடித்தேன். இதை வெளியே சொல்லக் கூடாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்கள். நானும் சொல்லக் சொல்லக் கூடாது என்று 6 மாதம் அமைதியாக இருந்தேன்.

இயக்குனர்
மைம் கோபி நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிப்பதாக என்னை தான் முதலில் ஒப்பந்தம் செய்தார்கள். அதன் பிறகு ஒரு நாள் இயக்குனர் என்னை சந்தித்து அந்த கேரக்டர் வேண்டாம் சார். அதை விட உங்களுக்கு நல்ல கேரக்டர் வைத்திருக்கிறேன். இதை நீங்கள் செய்தால் தான் நன்றாக இருக்கும். இந்த கதாபாத்திரம் அனைவராலும் பேசப்படும் என்றார். முதலில் நான் ஒப்பந்தமான கேரக்டருக்கும் இதையே தான் சொன்னார்.

மகிழ்ச்சி
களி உருண்டை என்று ஒரு கேரக்டர். படம் முழுக்க வரும். களி உருண்டையில் இருந்து தான் படத்தை துவங்க நினைத்தேன். ஆனால் ஒரு ஹீரோ வேண்டும் என்பதால் ஹீரோவில் இருந்து ஆரம்பித்தேன். நீங்கள் நடுவில் வருவீங்க சார் என்றார் இயக்குனர். அடடா, நமக்கு இப்படி ஒரு கேரக்டரா என்று மகிழ்ந்தேன்.

சதி
சம்பளம் தான் சார் ஒரு பிரச்சனை என்றார். சரி முதலில் 5 நாள் கேரக்டர் கொடுத்தீர்கள். தற்போது 30 நாட்கள் கேரக்டர் கொடுத்துள்ளீர்கள். எந்த சம்பளமாக இருந்தாலும் நடிக்கிறேன் என்று இயக்குனரிடம் கூறினேன். சதி என்றால் என்னவென்று தெரியாது. சினிமாவில் இருந்து செல்பவர்கள் அரசியலில் ஏன் ஜெயிக்கிறார்கள் என்றால் சதி இங்கிருந்து தீட்டப் படுகிறது.

ஹீரோயின்கள்
வில்லனாக நடித்தால் ஹீரோயின்கள் ஒட்டவே மாட்டார்கள். ஆனால் ஹீரோவை விட காமெடியன்களிடம் தான் ஹீரோயின்கள் அதிகம் ஒட்டுகிறார்கள். சரி நமக்கு இந்த படம் மூலம் முதன்முதலாக காமெடி கதாபாத்திரம் கிடைத்துள்ளது. ஹீரோயின்களுடன் ஒட்டிவிடலாம் என்று நினைத்தால் இந்த ஹீரோ வைபவும், காமெடியன் கருணாகரனும் என்னை அவர்கள் அருகிலேயே செல்லவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

கருணாகரன்
ஹீரோயின்கள் பக்கத்தில் சென்றாலே உடனே ஏதாவது காரணம் சொல்லி என்னை அங்கிருந்து அனுப்பி வைத்துவிடுவார்கள். கடைசி வரைக்கும் ஹீரோயின்களுடன் என்னை பேசவிடவே இல்லை. ஹீரோயின்களுடன் கடலை போடலாம் என்று நினைத்து ஏமாந்தேன். இந்த சோகத்தில் தான் இந்த படத்தில் நடித்து முடித்தேன். ஹீரோயினை ஹீரோக்கள், காமெடியன்கள் எப்படி பிக்கப் பண்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன் என்றார் ரவி மரியா.