ஆர்த்தியை வெறுப்பேத்த.. ரிசப்ஷனுக்கு கெனிஷாவுடன் கைகோர்த்தபடி வந்த ரவி மோகன்.. இதெல்லாம் பாவம்யா!

சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமணத்திற்கு பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் கலந்துகொண்டது சோஷியல் மீடியாவில் பெரும் பேசுபொருளான நிலையில், தற்போது வரவேற்பு நிகழ்ச்சிக்கும் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். ரவி மோகனின் இந்த செயல் அவர் மீதான நன் மதிப்பை கெடுத்துவிட்டது என பலரும் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் ரவி மோகன், ஆர்த்தியை 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.15 ஆண்டுகளாக இணைபிரியாத தம்பதிகளான இருந்த இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து, ரவி மோகன், மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தார். ஆனால், ஆர்த்தியோ இதில் உடன்பாடு இல்லை, நான் அவரை சந்தித்து பேச வேண்டும், அதற்கு கூட அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, ஜெயம் ரவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருந்தார். இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ரவி மோகன்: இந்நிலையில், ரவி மோகன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமணத்தில் கெனிஷா உடன் வந்திருந்தார். ஒரே நிற உடையில் கணவன் மனைவி போல இவர்கள் வந்தது. பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரவி மோகன் அடுத்த திருமணத்துக்கு ரெடியாகிவிட்டதை சூசகமாக அறிவித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் பேச்சு எழுந்தது. மறுபுறம் ரவி மோகனின் இந்த முடிவால் தவித்துப்போன ஆர்த்தி, மனம் நொந்து போய் தனது இன்ஸ்டாகிராமில் இரண்டு பக்கங்களுக்கு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

கண்ணீர் அறிக்கை: அதில், மகன்களுக்காக அமைதி காத்து வந்தேன், நான் ஓராண்டாக சந்தித்து வந்த வலியையும், வேதனையும் மகன்களுக்காக பொறுத்துக்கொண்டு இருந்தேன். 18 ஆண்டு காதல், விசுவாசம், பற்றுதலுடன் நான் யாருக்கு துணைநின்றேனோ அவர், என்னைப் பிரிந்து சென்றது மட்டுமல்லாமல், ஒரு காலத்தில் உறுதியளித்த பொறுப்புகளையும் முற்றிலுமாகத் துறந்துவிட்டார் என ஆர்த்தி கண்ணீருடன் பதிவிட்டு இருந்தார். இந்த கண்ணீர் பதிவுக்கு நடிகைகள் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோர் லைக் செய்தது மட்டுமில்லாமல், தைரியமாக இருக்கும் படி அதில் பதிவிட்டு இருந்தனர்.

Ravi mohan kenisha Aarti

மீண்டும் ஜோடியாக: திருமணத்துக்கு கெனிஷா உடன் வந்ததே பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையல், ஜசரி கணேஷின் மகள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மீண்டும் இருவரும் ஜோடியாக தங்கள் ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்துள்ளனர். இதன் மூலம், ரவி மோகன் ஆர்த்தியை விவாகரத்து செய்யும் முடிவில் தீர்க்கமாக உள்ளார் என்பதும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளது உறுதியாகிவிட்டது. ஆர்த்தி உடனான விவாகரத்துக்கு பின் ரவி மோகன் - கெனிஷாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

நேற்று ஆர்த்தி, காண்பவர்களின் கண்ணில் நீரை வரவைக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்ட பிறகும், ரவி மோகன் கெனிஷா உடன் வந்தது சரியில்லை என்றும், பாவய்யா ஆர்த்தி என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ரவி மோகனின் இந்த மோசமான செயலால் இத்தனை ஆண்டுகள், அவர் சேர்ந்து வைத்த பெயரை அவரே கெடுத்துக்கொள்கிறார் என பிரபலங்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X