சிஎம் விஜய்யை சந்தித்த குஷ்பு.. ரவி மோகன் யாரை சந்திச்சிருக்காரு பாருங்க.. என்ன பாஸ் நடக்குது?

சென்னை: சினிமாவில் சில காலம் நடிக்கப் போவதில்லை என்றும் விவாகரத்து கிடைக்கும் வரை தனது பட வேலைகள் நடக்காது என கண்ணீர் விட்டு கதறி அழுது பேசிய ரவி மோகன் அனைத்து கஷ்டங்களையும் போக்க வேண்டும் இறைவா என மாலை அணிந்துக் கொண்டு ஆன்மிக பயணமும் மேற்கொண்டார்.

இந்நிலையில், திரும்பி வந்த அவர் மீண்டும் சினிமா பணிகளை தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று கல்வி மற்றும் சினிமா துறையை கவனித்துக் கொள்ளும் அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Ravi Mohan and Kushbhu Meets Minister Rajmohan photos goes viral

நடிகர் விஷால் ராஜ்மோகன் எல்லாம் சினிமா துறை அமைச்சரா? என புலம்பிய நிலையில், முதல் நபராக ராஜ்மோகனுக்கு ரவி மோகன் கொடுத்துள்ள மரியாதை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகை குஷ்பு விஜய்யை சந்தித்த நிலையில், ரவி மோகனும் விஜய்யை சந்தித்தாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

விஜய்யை சந்தித்த குஷ்பு: நடிகை குஷ்பு இன்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்து சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தினார். மேலும், குஷ்பு சின்னத்திரை கலைஞர்கள் சார்பான சில கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் வைத்துள்ளார். வாக்களித்த மக்களை சந்திக்காமல் தொடர்ந்து சினிமா பிரபலங்களையே முதலமைச்சர் ஆன பிறகும் விஜய் சந்தித்து வருகிறார் என்றும் பாதிக்கப்பட்ட மக்களை இப்போது அவர் சென்று பார்க்க யார் தடையாக இருப்பது என்கிற விமர்சனங்களும் கிளம்பி வருகின்றன.

Ravi Mohan and Kushbhu Meets Minister Rajmohan photos goes viral

ராஜ்மோகனை சந்தித்த ரவி மோகன்: முதலமைச்சர் விஜய்யை குஷ்பு இன்று சந்தித்த நிலையில், அதே நேரத்தில் நடிகர் ரவி மோகன் அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. தனது குடும்பத்தையே குஷ்பு தான் கெடுத்து விட்டார் என மறைமுகமாக ரவி மோகன் சாடியிருந்த நிலையில், ராஜ்மோகனை சந்தித்து ரவி மோகன் என்ன கோரிக்கை வைத்தார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. முதலமைச்சர் விஜய்யையும் ரவி மோகன் சந்தித்தாரா? அவருடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

Ravi Mohan and Kushbhu Meets Minister Rajmohan photos goes viral

குஷ்புவும் சந்தித்தார்: புட் சட்னி யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ராஜ்மோகன் பாபா பிளாக் ஷிப் எனும் படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர், விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே அவருடன் சேர்ந்து பணியாற்றி வந்த ராஜ்மோகன் தேர்தலில் வெற்றிப் பெற்ற நிலையில் கல்வி மற்றும் சினிமா துறைகளை கவனிக்கும் அமைச்சராக மாறியுள்ளார். இந்நிலையில், ராஜ்மோகனை குஷ்புவும் சந்தித்த போட்டோக்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X