ஜாலியாக ஆட்டம் போடும் டோரா ரவி மோகன்.. புஜ்ஜி கெனிஷா கூட வரலயானு கேட்கும் நெட்டிசன்கள்!

சென்னை: இப்போது எல்லாம் இணையவாசிகளிடம் ரவி மோகன் என்று கூறினாலே, ஆட்டோமேடிக்காக கெனிஷா ஃபிரான்சிஸ் குறித்தும் பதில்கள் வந்துவிடுகிறது. ரவி மோகனின் விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர், அவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒன்றாகவே காணப்படுவதால் இவர்கள் இருவர் குறித்த கிசு கிசுக்களு அவை தீனியாக மாறிவிடுகிறது. இப்படி இருக்கும்போது, இணையத்தில் தற்போது ரவி மோகன் நடனம் ஆடும் வீடியோ பரவி வருகிறது. அதைப் பார்த்த இணையவாசிகள் கெனிஷா எங்கே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ரவி மோகன் தற்போது சிவகார்த்திகேயனின் 25 வது படமான பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன இவரது பிரதர் படமும், பொங்கலுக்கு ரிலீஸ் ஆன காதலிக்க நேரமில்லை படமும் படு தோல்விப் படங்களாக மாறியது. இந்த படங்கள் இரண்டுமே சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது தான், காரணம் என்றாலும், பயில்வான் ரங்கநாதன் புதுவிதமான காரணம் ஒன்றைக் கூறினார். அதாவது ரவி மோகனின் விவாகரத்தே படங்களில் தோல்விக்கு காரணம் என்று எல்லாம் கூறினார்.

Ravi Mohan Dance Video Goes Trending Netizens Asks Where IS Keneeshaa
Photo Credit:

நெட்டிசன்கள்: ரவி மோகனின் விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் அவரும், அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையில் வார்த்தைப் போர் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இது மட்டும் இல்லாமல் ஆர்த்தியின் குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ற வகையில், ரவி மோகனும் - கெனிஷா பிரான்சிஸும் எப்போதும் ஒன்றாகவே சுற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள், இந்த விஷயத்தில் ஆர்த்தி தான் பாதிக்கப்பட்டவர், அவர் மீது எந்த தவறும் இல்லை என்று ஒரு தரப்பினரும், இத்தனை ஆண்டுகளாக நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்த ரவி மோகன் இப்போது நிம்மதியாக வாழ்வது பலருக்கும் கண்களை உறுத்துகிறது என்று எல்லாம் பேசி வருகிறார்கள்.

ரவி மோகன் நடனம்: ஒரு கட்டத்திற்கு மேல், ரவி மோகனும் அமைதியாகிவிட்டார், ஆர்த்தி ரவியும் அமைதியாகிவிட்டார். ஆனால் இந்த இணையவாசிகள் இருக்கிறார்களே, திரும்பத் திரும்ப எதையாவது சொல்லி அவர்களை அட்டாக் செய்து வருகிறார்கள். அதாவது ரவி மோகன் தனது விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர், கெனிஷா பிரான்சிஸ் உடன் பொது இடங்களில் காணப்படுவது சர்ச்சைகளுக்கு இடமளித்தது. இப்படியான நிலையில், ரவி மோகன் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் செம ஜாலியாக நடனம் ஆடிக் கொண்டு உள்ளார்.

Ravi Mohan Dance Video Goes Trending Netizens Asks Where IS Keneeshaa
Photo Credit:

டோரா - புஜ்ஜி: இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவ, இணையவாசிகளோ வழக்கம்போல் ரவி மோகனை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக, டோரா கூட எப்பவுமோ புஜ்ஜி இருக்கனுமே, இந்த வீடியோவுல புஜ்ஜியைக் காணோம் என்று கமெண்ட் அடுத்து வருகிறார்கள். மேலும் சிலரோ, எப்பவுமோ கூட ஒருத்தரை கூட்டிட்டு சுத்துவாரே அவங்களை எங்க காணோம் என்றும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X