படம் இயக்க போகும் ரவி மோகன்.. அண்ணனுக்கு போட்டியா.. யார் ஹீரோ தெரியுமா?

சென்னை: ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ரவி மோகன். அவர் நடித்த முதல் படமே வெற்றி வாகை சூடியது. இதனால், தனது பெயருக்கு முன்னாள் படத்தின் பெயரும் சேர்ந்து கொண்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அவர், தற்போது இயக்குநராக களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவி மோகன் இயக்கும் படத்தில் ஹீரோ யார் என்பது தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

அண்ணன் - தம்பி பாசம்: எடிட்டர் மோகன் பையன், இயக்குநரின் தம்பி என தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு வாய்ப்பு கிடைத்தாலும், தனது நடிப்பு திறமையால் நல்ல நடிகராக உயர்ந்துள்ளார். ஜெயம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் .சுப்ரமணியம், மழை, தனி ஒருவன் போன்ற வெற்றி படங்களை மோகன் ராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜெயம் ரவியே லீட் ரோலில் நடித்து வந்தார். தம்பியை உயர்த்தி விட்ட அண்ணனாக ராஜா இருக்கிறார். தனி ஒருவன் படத்திற்காக விருது பெற்ற ரவி மோகன், நான் துவண்டு போனபோதெல்லாம் என்னை என் அண்ணன் தூக்கி விட்டார் என தெரிவித்திருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Director Ravi mohan Yogi Babu Ravi mohan

பெயர் நீக்கம்: தொடர் தோல்விகளை கண்டு வரும் ரவி மோகன், ஜெயம் என்ற பெயரை நீக்கி ரவி மோகன் என அழைைக்குமாறு அழைப்பு விடுத்தார். அசாத்திய நம்பிக்கை, அளவற்ற கனவுகளோடு புத்தாண்டில் நாம் கால் பதிக்கும் இந்த தருணத்தில் உங்களிடம் என் வாழ்க்கையின் புதிய பயணத்தை குறிக்கும் மாற்றத்தை பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு மீண்டு எழுவேன் என்ற நம்பிக்கையும் வைத்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிவகார்த்திகேயனுடன் இணைந்து பராசக்தி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அவதாரம்: ரவி மோகன் சினிமாவில் பிஸியாக நடித்து கொண்டிருந்தபோதே இயக்குநராக படங்களை இயக்குவதில் தான் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனை பல மேடைகளில் அவரே தெரிவித்தார். எனக்கு பிடித்த நடிகர் விஜய். அவர் நடிக்கும் படங்களை இயக்குவது வாழ்நாள் ஆசை என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், விஜய் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு தான். ரவி மோகன் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ யார் என்பது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. ஹீரோவின் பெயரை கேட்டு பிரபலங்களும் எப்படிப்பா என்று கேட்க தொடங்கியுள்ளனர்.

அண்ணனுக்கு போட்டியா?: ரவி மோகன் ஆரம்பகாலகட்டத்தில் ரீமேக் பட ஹீரோ என விமர்சிக்கப்பட்டார். அப்படி இருந்தும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். அதன் பிறகு அந்த பெயர் மாறியது. அதேபோன்று அவரது அண்ணன் ராஜா மோகன் ஜெயம் ராஜா என்ற பெயரை தனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன் ராஜா என மாற்றிக்கொண்டார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு அவர் இயக்கும் படங்கள் அனைத்தும் தனித்துவம் பெற்றுள்ளன. சல்மான்கானை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், ரவி மோகன் இயக்குநராக முடிவெடுத்திருப்பது ஒரு உறைக்குள் 2 கத்தியா என்ற போட்டி நிலவ தொடங்கி விட்டதாம். அவர் தன்னை வளர்த்து விட்ட அண்ணனுக்கு போட்டியாக வந்துவிட்டாராம். ரவி மோகன் அண்ணன் மீதிருக்கும் அன்பை பல விதங்களில் தெரிவித்திருப்பார்.

வில்லன்: பராசக்தி படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ரவி மோகன் புது முயற்சியில் இறங்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிப்பது தான் ஹைலட். வளர்ந்து வரும் நடிகர்கள் படத்தில் ஈகோ இல்லாமல் இவர் நடிப்பது வியக்க வைத்துள்ளது. மேலும், தொடர் தோல்வி படங்களில் இருந்து ஹிட் கொடுக்க முயற்சித்து வருவதும் அறிந்தது தான். பராசக்தி படத்தை அவர் மலை போல் நம்பியுள்ளார். டாடா படத்தின் இயக்குநர் இயக்கும் படத்திலும் அரசியல்வாதியாக நடிக்கிறார். படத்தின் முன்னோட்டமே பெரிய வரவேற்பு கிடைத்தது.

இவர் தான் ஹீரோவா: கோமாளி, காதலிக்க நேரமில்லை, சைரன் போன்ற படங்களில் ஜெயம் ரவியுடன் யோகி பாபு இணைந்து நடித்து வந்துள்ளார். காதலிக்க நேரமில்லை படத்தின் ப்ரமோஷன் பணிகளில் கூட நான் இயக்கும் படத்தில் யோகி பாபு தான் ஹீரோ என்றும் ரவி மோகன் தெரிவித்தார். அப்போது அவரது பேச்சு சும்மா விளையாட்டு என்று நினைத்திருந்தனர். ஆனால், உண்மையாகவே அவர் தான் ஹீரோவாம். அதற்கான கதையை ரவி மோகன் எழுதி முடித்து விட்டாராம். தொடர் தோல்வியை சந்தித்து வரும் ரவி மோகன் இயக்குநராக வெற்றி பெற்று புதிய பயணத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெடியனாக நடித்து வந்த யோகி பாபு மண்டேலா படத்தின் மூலம் ஆச்சர்யத்தை தந்தவர் யோகி பாபு. அவர் எத்தனை படங்கள் ஹீரோவாக நடித்தாலும் மண்டேலா போன்று ஒரு படம் வருவதும் கடினமே. அதன் பிறகு அவர் நடித்த பொம்மை நாயகி படம் பாராட்டுக்களை பெற்றன. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுமியை எப்படி தேற்றுவது, இந்த கொடூரமான உலகத்தில் இருந்து மகளை காக்க போராடும் தந்தையின் வலியை கடத்தி சென்றிருப்பார் யோகி பாபு. அவர் நடித்த தர்ம பிரபு படங்களும் வெற்றியை பெற்றன. ஒவ்வொரு கதையையும் வித்தியாசப்படுத்தி நடித்து தனது திறமையை வெளிக்கொணடு வருகிறார் யோகி பாபு. பெரிய ஹீரோக்களின் படங்களில் காமெடியனாகவும் ஒரு பக்கம் நடிகனாகவும் மனதிற்கு பிடித்த படங்களில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு எப்போது?: தமிழ் சினிமாவில் நடிகராக இருந்துகொண்டு இயக்குநராக வலம் வந்துள்ளனர். சிலர் இயக்குநராக இருந்து நடிகராகவும் வெற்றி பெற்றுள்ளனர். எம்ஜிஆர், ரஜினி, கமல், ராகவா லாரன்ஸ், பிரபு தேவா, தனுஷ், வரிசையில் தற்போது ரவி மோகனும் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த யோகி பாபு, மற்ற படங்களின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன். இப்படங்களை முடித்த பின்பு சில மாதங்களில் ரவி மோகன் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வரும் என கூறியுள்ளார். ஆச்சரியம் என்னவென்றால் நாயகர்களாக நடித்தவர்கள் இயக்குநராக அறிமுகும் ஆகும்போது பெரிய நடிகர்களை வைத்து இயக்க ஆசைப்படுவார்கள். ரவி மோகன் எடுக்கும் முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனது அண்ணன் மோகன் ராஜாவுக்கு போட்டியாக வந்துவிடுவாரோ என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X