கெனிஷாவால் ரவி மோகன் வீட்டில் பிரச்னையா?.. அப்பா வரக்கூடாதுனு சொன்னாரா?.. பிரபலம் இப்படி சொல்றாரு

சென்னை: ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்திருந்த ரவி மோகன்; சில காரணங்களால் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவிருக்கிறார். விரைவில் அவர்களுக்கு விவாகரத்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க கெனிஷாவுடனான நெருக்கத்தால்தான் ஆர்த்தியை ரவி பிரிவதாகவும் ஒரு பேச்சு ஓடியது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கோலிவுட்டில் எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்த ரவி மோகன்; சுஜாதாவின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகன்கள். கோடம்பாக்கத்தின் ஃபேவரைட் ரியல் ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்த அவர்களுக்குள் கடந்த சில காலமாக பிரச்னைகள் வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன. எப்படியும் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று அவரது குடும்பத்தினரும் நினைத்தார்கள்.

மாறாத ரவி மோகன்: ஆனால் ஆர்த்தியை பிரிவது என்ற முடிவிலிருந்து ரவி மோகன் கடைசிவரை பின்வாங்கவில்லை. எப்படியாவது அவருடன் சேர்ந்து வாழ்ந்துவிடலாம் என்றுதான் ஆர்த்தி நம்பியிருந்தார். ரவியோ தான் எடுத்த முடிவிலிருந்து கொஞ்சம்கூட பின்வாங்காமல்; கடந்த வருடம் பிரிவை அறிவித்துவிட்டார். அதேசமயம் இந்த முடிவு தன்னிடம் ஆலோசித்து எடுக்கப்பட்டதில்லை என்று ஆர்த்தி விளக்கமளித்திருந்தார்.

Ravi Mohan Divorce Update Kenisha Controversy amp amp Journalist Andhanan Shocking Claims Go Viral
Photo Credit:

என்ன காரணம்?: இந்த பிரிவுக்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது, 'ரவியை ஆர்த்தியும், சுஜாதாவும் தங்கள் கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறார்கள்' என்பது. முதலில் அதில் உண்மை இருக்காது என்றுதான் அனைவருமே நினைத்தார்கள்; ஆனால் ரவி மோகன் வெளியிட்டிருந்த அறிக்கையில் அதை க்ளியராக சொல்லிவிட்டார். இனிமேலும் ரவியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவெடுத்த ஆர்த்தியும் ஜீவனாம்சம் கேட்டது குறிப்பிடத்தக்கது.

கெனிஷாவின் என்ட்ரி: இதற்கிடையே பின்னணி பாடகி கெனிஷா என்பவருடன் ஏற்பட்ட நெருக்கம்தான் இதற்கெல்லாம் காரணம் என கிசுகிசுக்கள் கிளம்பின. அதனை ரவி முதலில் மறுத்தார். காலப்போக்கில் கெனியுடன் பொதுவெளிகளுக்கு வருவதை வழக்கமாக மாற்றிவிட்டார். விரைவில் அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் நடக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கோலிவுட்டில் பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன.

அந்தணன் பேச்சு: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ரவி மோகனின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவரை பார்ப்பதற்கு கெனிஷாவுடன் செல்ல முடிவெடுத்திருந்தார் ரவி. அதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட அவரது அப்பா, 'அந்தப் பெண்ணோடு வந்தால் வர வேண்டாம்' என்று சொல்லிவிட்டாராம். ரவியும், கெனிஷாவையே வேண்டாம் என்று சொன்னவர்களிடம் நமக்கு என்ன வேலை என்று இருப்பதாக கூறுகிறார்கள். பிள்ளைகளுக்காக விட்டுக்கொடுத்து போகும் பெற்றோர்கள்தான் தமிழ்நாட்டில் அதிகம். ரவியோ அப்படி இல்லை.குழந்தைகளை விட்டுவிட்டு இன்னொரு இடத்துக்கு சென்றார். ஆனால் அதுவும் சரியாக இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X