ரவி மோகனுடன் பிரிவு.. ரூட்டை மாற்றிய ஆர்த்தி ரவி.. குஷ்பூவும், அம்மாவும் கூடவே இருக்காங்களே
சென்னை: நடிகர் ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு காதல் திருமணம் ஆகும். திருமணாகி இரண்டு மகன்களை பெற்ற அவர்கள்; நல்லபடியாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ஆர்த்தியை பிரிவதாக ரவி அறிவித்தார். ரவியுடன் சேர்ந்து வாழ ஆர்த்தி எவ்வளவோ முயற்சித்தும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவி என்கிற ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் சூழலில், எதிர்கால நலன் கருதி ஆர்த்தியை பிரிகிறேன் என சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார். அவரது அந்த அறிவிப்புக்கு பிறகு தொடர்ந்து சில வாரங்கள் ஆர்த்தி, சுஜாதா, ரவி ஆகியோர் மாறி மாறி இந்தப் பிரச்னை குறித்து அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டே இருந்தார்கள். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் சூழலில்; இவர்களது அறிக்கை போருக்கு நீதிபதிதான் முற்றுப்புள்ளி வைத்தார்.
ஜீவனாம்சம் கேட்ட ஆர்த்தி: இனி தன்னுடன் ரவி மோகன் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என்பது உணர்ந்துகொண்ட ஆர்த்தி; தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை பார்த்த ரசிகர்களோ, இந்த விவகாரத்தில் ஆர்த்தி இவ்வளவு பணம் கேட்டிருக்கக்கூடாது என்றும் விமர்சனம் வைத்தார்கள். இதற்கிடையே கெனிஷாவுடன் நெருக்கமான பழக்கம்தான் ரவியின் இந்த முடிவுக்கு காரணம் என சொல்லப்பட்டது.

ஜோடியாக வரும் ரவி: ஆனால் அதை முதலில் மறுத்தார் ரவி. நாட்கள் செல்ல செல்ல கெனிஷாவுடன் பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வர ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான பராசக்தி படத்தைகூட கெனிஷாவுடன்தான் பார்த்தார். இரண்டு பேரும் ஜோடியாக வருவதை பார்த்து அவ்வப்போது ஆர்த்தியும் கடுப்பாவதாக தெரிகிறது. மேலும் தன்னை பற்றி மறைமுகமாக ரவி மோகன் சில இடங்களில் தாக்கி பேசியதை பார்த்து இவரும் தன் பங்குக்கு பதிலடியை கொடுத்துவந்தார்.
திருப்பதியில் ஆர்த்தி: இந்நிலையில் சிங்கிளாக இருக்கும் ஆர்த்தி தனது தாய் சுஜாதா, நடிகை குஷ்பூ ஆகியோருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது ஆர்த்திக்கு நிழலாக குஷ்பூ இருந்துகொண்டே இருந்தார். இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் விரைவில் ஆர்த்தியின் வாழ்க்கையில் நல்லது நடக்க அந்த ஏழுமலையான் அனுமதி வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி இத்தனை நாட்களாக ஆர்த்தி கோயிலுக்கு போகும் வீடியோக்கள் பெரும்பாலும் வந்ததில்லை. அதிகம் வெளிநாடு பயண வீடியோக்கள், புகைப்படங்களைத்தான் பதிவேற்றுவார். இப்போது ரவியுடனான பிரிவுக்கு பிறகு ஆர்த்தி தனது ரூட்டை கொஞ்சம் மாற்றிவிட்டாரோ என்றும் கமெண்ட்ஸ் செய்கிறார்கள்.
குஷ்பூவின் பங்கு: முன்னதாக ரவி - ஆர்த்தி சந்தித்ததே குஷ்பூ மூலம்தான். இந்தத் திருமணத்துக்கு முதலில் ரவியின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. குஷ்பூ தலையிட்டு பேசி அவர்களிடம் சம்மதம் வாங்கினார் என சொல்லப்படுவதுண்டு. ரவி பிரிவை அறிவித்த பிறகு குஷ்பூ உடனடியாக ஆர்த்திக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











