பராசக்தி ரவி மோகன் இந்தப் போடு போடுறாரே.. வில்லங்கமான விஷயத்தையே இழுக்குறாரு.. எஸ்கேவுக்கே டஃப்தான்
திருவனந்தபுரம்: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் பராசக்தி. ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்; இன்னும் அப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் நிச்சயம் இன்றைக்குள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ப்ரோமோஷனில் ஈடுபட்டிருக்கிறது படக்குழு. அந்தவகையில் தனி விமானத்தில் கேரளாவுக்கு சென்று சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் ப்ரோமோஷன் செய்தார்கள்.
சூரரைப் போற்று படத்தின் வெற்றி சுதா கொங்கராவின் மதிப்பை மேலும் உயர்த்தியது. இப்போது அவர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரை வைத்து பராசக்தி படத்தை இயக்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் 60களில் நடந்த ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி இதற்கான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர். தொட்டிருக்கும் சப்ஜெக்ட் சென்சேஷனலான ஒன்று என்பதால் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.
முக்கியமான படம்: அமரன் படம் எஸ்கேவின் கரியரில் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. தற்போது அதையும் தாண்டி முக்கியமான படமாக இது அமையும் என்று எஸ்கேவும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார்கள். ட்ரெய்லரும் பட்டாசாக அமைந்துவிட்டது. குறிப்பாக ஜனநாயகன் ட்ரெய்லரைவிடவும் பராசக்தி ட்ரெய்லர் அதிக வியூஸ் பெற்று யூடியூபில் டாப்பில் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்துள்ளது.

ரிலீஸாகுமா?: படம் பத்தாம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் அதற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதன் காரணமாக் திட்டமிட்டபடி நாளை வெளியாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதே மாதிரிதான் ஜனநாயகன் படத்துக்கு சர்ட்டிஃபிக்கேட்டை தராமல் இழுத்தடித்தார்கள் சென்சார் அதிகாரிகள். இதனால் ஒன்பதாம் தேதி படம் வெளியாகவிருந்த அந்தப் படம் இப்போது தள்ளி போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரோமோஷனில் தீவிரம்: இருந்தாலும் இன்றைக்குள் கண்டிப்பாக சான்றிதழ் கிடைத்துவிடும் என்று நம்பியிருக்கிறார்கள் படக்குழுவினர். அந்த நம்பிக்கையில்தான் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது. நேற்றுகூட தனி விமானத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் கேரளாவுக்கு சென்று ப்ரோமோஷனில் ஈடுபட்டார்கள். அந்த ப்ரோமோஷன் நிகழ்வில் ரவி பேசிய விஷயம் ரசிகர்களிடம் கலகலப்பை உண்டாக்கியுள்ளது.
என்ன பேசினார்?: அதாவது அவரிடம் தொகுப்பாளினி கேரளாவில் உங்களுக்கு பிடித்தது என்னவென்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், 'கேரளாவின் க்ரீன்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்' என கூறினார். உடனே அருகில் அமர்ந்திருந்த சிவா உள்ளிட்டோரை பார்த்து, 'அந்த க்ரீன்ஸ் இல்லை ப்பா (கஞ்சாவை சொல்கிறார்) என சொல்லிவிட்டு; கேரளாவில் இருக்கும் பசுமை எனக்கு எப்போதுமே பிடிக்கும் என பதிலளித்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, ரவி மோகன் ஃபுல் ஃபார்மில் இருக்காரு போல. ஆடியோ லான்ச்சிலும் தனது பெர்சனல் விஷயங்களை மனதில் வைத்து அவர் பேசிய விதமே பட்டாசாக இருந்தது. இப்போது இப்படி பேச ஆரம்பித்துவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











