இன்னைக்கு ரவி மோகன் டே தான் போல.. டிஜிபி மகளையே அடுத்த படத்துக்கு ஹீரோயின் ஆக்கிட்டாராம்.. யாரு?
சென்னை: இந்த ஆண்டு முழுவதும் ரவி மோகனுக்கு ஏகப்பட்ட படங்கள் வரிசையாக குவியக் காத்திருக்கின்றன. சோலோ ஹீரோவாக ஹிட் கொடுக்கவில்லை என்கிற குறையையும் அடுத்தடுத்த படங்கள் மூலம் அவர் சரி செய்துவிடுவார் என்றே தெரிகிறது. காலையில் 'கராத்தே பாபு' டீசர் வெளியான நிலையில், தற்போது 'பராசக்தி' படத்தின் டீசரும் வெளியாகி மிரட்டுகிறது.
24 படத்தில் சூர்யா வில்லனாக எப்படி இருந்தாரோ அதே போன்ற லுக்கில் ஜெயம் ரவி டோப்பா எல்லாம் வைத்து நடித்து மிரள விடுகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா இந்த படத்தை மிஸ் செய்து விட்டாரே என ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

டாடா பட இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள 'கராத்தே பாபு' படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் ஹீரோயினாக கமிட்டாகியிருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளன. அவங்க யாரு? இந்த படத்தில் என்ன ரோலில் கலக்கப்போறாங்க என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
வரிசை கட்டி நிற்கும் படங்கள்: நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்ட நிலையில், இந்த ஆண்டு அவர் நடிப்பில் பொங்கலுக்கே காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான "என்னை இழு இழு இழுக்குதடி" பாடல் ஒன்றே அந்த படத்தை பார்க்க ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வருகிறது. ரவியும் அந்த படத்தில் ரொம்பவே ஹேண்ட்ஸமாக நடித்திருந்தார். அடுத்ததாக அவர் நடிப்பில் கராத்தே பாபு, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி, ஜீனி என பல படங்கள் அவர் நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன.

டிஜிபி மகள் தான் ஹீரோயினாம்: டாடா படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸை அப்படி நடிக்க வைத்திருந்த கணேஷ் கே. பாபு அடுத்து ரவி மோகனை இயக்கிவரும் கராத்தே பாபு படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிஸ்வாலின் மகள் தாவ்தி எஸ். ஜிவால் ஹீரோயினாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ன ரோல்: கராத்தே பாபு எனும் அரசியல்வாதியாக ஆர்.கே. நகர் தேர்தலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அவருக்கு மனைவியாக தாவ்தி எஸ். ஜிவால் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த படத்தில் கே.எஸ். ரவிகுமார், நாசர், சக்தி வாசுதேவன், விடிவி கணேஷ், சுப்ரமணியம் சிவா, பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாக கூறுகின்றனர்.

பிரதீப் ஆண்டனி: கவினின் நண்பரும் டாடா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிக் பாஸ் பிரபலமுமான பிரதீப் ஆண்டனி மீண்டும் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அவரது கதாபாத்திரமும் பேசப்படும் என்பதால் இயக்குநர் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரவி மோகன் காட்டில் நல்ல மழை தான் என கோலிவுட்டே அவரை பற்றிய பேச்சுக்களை தான் பேசி வருகின்றன.


Click it and Unblock the Notifications











