அமைதி கொடுக்கும் பெண்களிடமே.. ஆர்த்தி ரவிக்கு கெனிஷா பதிலடி? தொடங்கியதா வார்த்தைப் போர்!
சென்னை: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டு, நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டுள்ளார். இந்த நேரத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் திருமணத்தில் கலந்து கொண்டது பெரும் புயலை கிளப்பியது. இதனால், கொந்தளித்த ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில், பாடகி கெனிஷா இன்ஸ்டாகிராமில் சரியான பதிலடி கொடுத்து வருகிறார்.
தமிழில் சினிமாவில் முன்னணி நடிகரான ரவி மோகன், அண்மையில் தனது மனைவியை ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிய என்ன காரணம் இருக்கிறது என்பதை இருவரும் கூறவில்லை என்றாலும், ஆர்த்தியின் தாய் ரவி மோகனிடம் டாக்ஸிக்காக நடந்து கொண்டதாகவும், ஆர்த்தி தனது தாய் பக்கம் நின்றதால் விவாகரத்து கொடுக்க ரவி முடிவு செய்ததாகவும் செய்திகள் பரவியது.
ரவி மோகன், ஆர்த்தி: ரவியின் விவாகரத்து சர்ச்சை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, பாடகி கெனிஷா என்கிற பெண்ணுடன் ஜெயம் ரவிக்கு தொடர்பு இருப்பதாகவும், கோவாவில் இவர்கள் இருவரும் வேகமாக காரை ஓட்டிய போது அபராதம் கட்டியதற்கான ரசீதுகளும் இணையத்தில் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், கெனிஷாவை தேவையில்லாமல் இந்த விஷயத்தில் இழுக்க வேண்டாம் என்றும், அவர் பலரின் உயிரை காப்பாற்றிய ஹீலர் என்று பேசி இருந்தார். இதையடுத்து, ரவி மோகன், ஆர்த்தி ரவி சர்ச்சை சற்று ஓய்ந்து இருந்தது.

ஆர்த்தி அறிக்கை: இதையடுத்து, தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணத்தில், ரவி மோகன் கெனிஷாவுடன் கலந்து கொண்டார். தோழி என்று சொல்லிவிட்டு, இப்படி அந்த பெண்ணுடன் கைக்கோர்த்து செல்கிறாரே என்று பலர் இணையத்தில் திட்டித்தீர்த்தனர். இணையத்தில் இந்த வீடியோவை பார்த்து கொந்தளித்து போன ஆர்த்தி, உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், தனது குழந்தைகளை ரவி மோகன் பார்த்துக்கொள்வதில்லை என்றும், தான் வாழும் வீட்டை காலி செய்யுமாறு அவரிடமிருந்து எவிக்ஷன் நாேட்டிஸ் வந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த ஒரு வருடமாக நான் குழந்தைகளுக்காக அமைதியாக இருந்துவிட்டேன், இனியும் அமைதியாக இருக்க முடியாது, என் குழந்தைகள் சிறியவர்கள் அவர்களுக்கு சட்ட பிரச்சனை தெரியாது, ஆனால், தந்தையால் கைவிடப்பட்டுவிட்டோம் என்பது தெரியும். தந்தை என்பது வெறும் பட்டம் இல்லை அது பொறுப்பு என உருக்கமாக பதிவிட்டு இருந்தார். அந்த அறிக்கையை பார்த்து பலரும் கண்ணீர் வடித்தனர்.
கெனிஷாவின் பதிவு: இதனால் கடுப்பான இணையவாசிகள் கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத கெனிஷா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், மன அமைதியை கொடுக்கும் பெண்களால் மட்டுமே ஆண்கள் ஈர்க்கப்படுவார்கள். அவர்களிடம் இதயமும் அங்கு தான் செல்லும். அந்த பெண்ணின் கனிவு என்பது பாவனையாக இருக்காது. அது ஒரு பெரிய சக்தியாக இருக்கும். அவள் அவனது வலிமையுடன் போட்டியிடவில்லை, அவள் அதை சமநிலைப்படுத்துகிறாள். அப்படி இருக்கையில் இருவரும் அவரவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என ஆர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











