கெனிஷாவை கட்டிப் பிடித்த ரவி மோகன்.. இது காதல் அல்ல.. அதையும் தாண்டி.. லவ்லியா புரோபோஸ் செஞ்சுட்டாரு

சென்னை: நடிகர் ரவி மோகன் தற்போது நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பு என செம்ம பிஸியாக உள்ளார். என்னதான் அவரைச் சுற்றி பல சலசலப்புகளை அவ்வப்போது இணையத்தில் பார்க்க நேர்ந்தாலும், மனுஷன் தனது கெரியரில் செலுத்தும் கவனம் பலரும் கற்றுக் கொள்ள வேண்டியது. தனது விவாகரத்து வழக்கு ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டு இருந்தாலும், தனது தோழி கெனிஷாவுடன் அவர் அடிக்கடி பொது வெளிகளில் காணப்படுகிறார். இப்படி இருக்கையில் அண்மையில் ஒரு மேடையில் கெனிஷாவைக் கட்டிப் பிடித்து, குணா படத்தில் கமல்ஹாசன் பாடும் பாடலான கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடலில் வரும் வசனங்களைசொல்லி, அழகாக புரபோஸ் செய்வது போல, செய்து கட்டிப் பிடித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதாவது ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பாடலை படத்தில் வருவது போல மேடையில் ரீ கிரியேட் செய்தனர். கமல்ஹாசன் போல ரவி மோகன் வார்த்தைகளாக கூற, பாடகி ஜானகி போல கெனிஷா வரிகளை பாடலாக பாடினார்.

Ravi Mohan Hugs Kenisha on Stage Viral Guna Performance Sparks Buzz Online

இதில் , எனக்கு உண்டான
காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்ல.
இதையும் எழுதிக்க!
நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே
இதெல்லாம் போட்டுக்கணும் அஹ்?
இத பாரு எனகென்ன காயம்
இருந்தாலும் ஒடம்பு தங்கிடும்
ஒன் ஒடம்பு தாங்குமா

இது காதல்
என் காதல் என்னனு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நான் அழுது என் சோகம் ஒன்ன தாக்கிடுமோ
அப்டினு நெனைக்கும்போது
வர்ற அழுக கூட நின்னுடுது
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனிதக் காதல் அல்ல
காதல் அல்ல!
காதல் அல்ல!!

அதையும் தாண்டி

புனிதமானது!
புனிதமானது!!
புனிதமானது " என்பதை தனது ஸ்டைலில் கொஞ்சம் சொதப்பியவாறு கூறினார், அதைத் தொடர்ந்து கெனிஷா பாடுகிறார். பாடல் முடிந்த பின்னர் கெனிஷாவை அழகாக கட்டிப் பிடிக்கிறார் ரவி மோகன். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் ரவி மோகன் தான் சொதப்பிவிட்டேன் என்பது போல கெனிஷாவை நோக்கி முக பாவனைகளை காட்டுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த சிலர், இந்த பாடலை மேடையில் பாடுவதற்கு இசைஞானி இளையராஜாவிடம் அனுமதி வாங்கிட்டீங்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Read more about: ravi mohan kenisha jayam ravi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X