கெனிஷாவுடன் ரவி மோகன் போன இடத்தைப் பாருங்க.. மொத்தமா சரண்டர் ஆகிட்டாங்க போல.. வீடியோவைப் பாருங்க

சென்னை: தனது விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறார். ஏற்கனவே கெனிஷாவுடன் அவர் இணைந்து ஹீலிங் சென்டர் தொடங்க போவதாக அறிவித்திருந்தார். இதனால் இந்தியாவில் கோவா, வெளிநாடுகளில் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்தனர். இப்படி இருக்கையில் அவர்கள் இருவரும் தற்போது பாலி தீவுக்கு சென்றுள்ளனர். அங்கு தெய்வ வழிபாடு நடத்தி, மன அமைதிக்காக அவர் பின்பற்றிய வழிமுறைகள் தொடர்பான வீடியோவை கெனிஷா பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் தெய்வத்திடம் நாங்கள் சரணடைந்து விட்டோம், எங்களை ஒப்புக் கொடுத்து விட்டோம். அந்த இடம் நமது தோல்களை தொடாது. மாறாக அது ஆன்மாவைத் தொடும். ஒரு ஆத்ம திருப்தியைக் கொடுக்கும். நாங்கள் ஆன்மீக குளியல் குளித்தோம், அது மன அமைதியைக் கொடுத்தது. நாங்கள் இணைந்து சிரித்தோம் அது மன அழுத்தத்தை குறைத்தது என்று எல்லாம் பேசி உள்ளார்.

Ravi Mohan Keneeshaa Went Devotional Place at Bali Video Attracts Mass

அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் உள்ள இடம் பாலி தீவில் இருக்கும் ஒரு வழிபாட்டுத் தலம். பலரும் இந்த வீடியோவைப் பார்த்து இந்த இடம் எங்கு உள்ளது என்று கேட்டு வருகிறார்கள். கெனிஷாவோ ஓம் நமச்சிவாயா என்று சொல்லுங்கள் உங்களுக்கும் கடவுள் நிம்மதியைக் கொடுப்பார் என்று கமெண்ட் போட்டுள்ளார்.

இந்த வீடியோவில் கெனிஷா கடவுள் வழிப்பாட்டிற்காக விதவிதமான மலர்களைக் கொண்டு செல்கிறார். அதேபோல் அவர் வீடியோவில் காட்டும் இடத்தை பார்க்கும்போது ஆன்மீகச் சுற்றுலாவுக்கு 100 சதவீதம் சரியான இடம் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. ரவி மோகன், கெனிஷா இருவரும் இணைந்து குளித்து, சிரித்து, வழிபடுகிறார்கள். இவர்களுடன் மற்றவர்களும் உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டில் கெனிஷா தனது பிறந்தநாளுக்கு இதே போன்ற ஒரு ஆன்மீகத் தலத்திற்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது தொடர்பான புகைப்படங்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போதும் உள்ளது.

Ravi Mohan Keneeshaa Went Devotional Place at Bali Video Attracts Mass

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X