ரவி மோகனை கெனிஷா ஷூட்டிங்கிற்கே அனுப்பவதில்லையாம்.. பிரபலம் இப்படி சொல்றாரே?

சென்னை: கோலிவுட்டில் பெரிய சர்ச்சைகளில் எதுவும் சிக்காமல் இருந்த ரவி மோகன் சில வருடங்களுக்கு முன்பிருந்து அடிக்கடி ஏதோ ஒரு பேச்சில் அடிபடுகிறார். அதில் முக்கியமான ஒன்று கெனிஷாவுடனான பழக்கம். அவரால்தான் மனைவி ஆர்த்தியையே அவர் பிரிந்ததாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. இந்நிலையில் ரவி மோகன் - கெனிஷா உறவு பற்றி பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் சாந்தமான நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருந்தவர் சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். அப்போதிருந்து அடிக்கடி ஹெட்லைன்ஸாக மாறிவருகிறார் அவர். முக்கியமாக ஆர்த்தியை பிரிந்ததற்கு கெனிஷாவுடன் ரவி பழகியதுதான் காரணம் என்று பலர் சொன்னார்கள். முதலில் அதை திட்டவட்டமாக மறுத்தார் ரவி மோகன். மேலும் ஆர்த்தியுடனான பிரிவுக்கான காரணம் பற்றியும் அவர் சுற்றிவளைத்து பல காரணங்களை சொல்லிவிட்டார்.

கெனிஷாவுடன் நெருக்கம்: கெனிஷாவுடன் தனக்கு இருப்பது நட்பு மட்டும்தான் வேறு எதுவும் இல்லை என்றும் கூறியிருந்தார். அதேசமயம் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் தவறாமல் கெனிஷாவுடனேயே வருகிறார் அவர். தனது ஸ்டூடியோ திறப்பு விழாவில்கூட அவருக்கு அதீத முன்னுரிமை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இரண்டு பேர் பற்றியும் எக்கச்சக்கமாக பேச்சுக்கள் கிளம்பின. ஆனால் அவர்கள் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. நிகழ்ச்சிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஜோடியாக செல்வதை வழக்கமாக்கியிருக்கிறார்கள்.

Ravi Mohan Kenisha Relationship Sparks Fresh Controversy Journalist Anthanan Makes Shocking Claims
Photo Credit:

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்: சமீபத்தில்கூட ரவியும், கெனிஷாவும் ஒன்றாக வெளிநாடுக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது இரண்டு பேரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டானது. அதை பார்த்த ரசிகர்களோ அட கெனிஷாவிடம் ரவி மொத்தமாகவே சரண்டர் ஆகிவிட்டாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். இதற்கிடையே பராசக்தி படத்தை பார்த்த பிறகு, 'இந்தப் படம் ரவி மோகனால் மட்டும்தான் ஹிட்டாகும்' என்று கெனிஷா போட்ட போடு எஸ்கே ரசிகர்களிடையே பெரிய கொதிப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் ரவி மோகன் - கெனிஷா பற்றி பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "ரவி மோகனின் கராத்தே பாபு படம் உண்மையில் நன்றாக வந்திருக்கிறதாம். ஆனால் அதற்கு ரவி முழு ஒத்துழைப்பை கொடுக்கவில்லையாம். அவரை கெனிஷா ஷூட்டிங்கிற்கே அனுப்புவதில்லை என்று சொல்கிறார்கள். இன்னும் ரவி மோகனை வைத்து பத்து, பதினைந்து நாட்களுக்கு ஷூட்டிங் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நல்ல படத்துக்கு ஏன் அவர் இப்படி செய்கிறார் என தெரியவில்லை" என்றார்.

கராத்தே பாபு: இந்தப் பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக, டாடா படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கும் படம் கராத்தே பாபு. அரசியல் ஜானரில் உருவாகும் இப்படத்தின் டீசர் எல்லாம் அட்டகாசமாக இருந்தன. கண்டிப்பாக பெரிய ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனா அந்தப் படத்துக்கு ரவி ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என அந்தணன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டானதோடு மட்டுமின்றி ரவியின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X