எங்கே போனாலும் நீதான்.. ரவி மோகனை நினைத்து உருகும் கெனிஷா?.. என்ன செஞ்சிருக்காங்க பாருங்க
சென்னை: நடிகர் ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை கடந்த வருடத்தில் விவாகரத்தில் முடிந்தது. ஆர்த்தியுடனான பிரிவுக்கு கெனிஷாவுடன் ரவி நெருக்கமாக பழகியதுதான் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் அதை முதலில் மறுத்த ரவி; போகப்போக அந்தப் பேச்சின்படியே கெனியுடன் நெருக்கம் காட்டிவருகிறார்.
தமிழ் சினிமாவில் பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்காத ஹீரோக்களில் ஒருவராக இருந்தார் ரவி மோகன். குஷ்பூ மூலம் பழக்கமான ஆர்த்தியை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளாக வலம் வந்தார்கள் அவர்கள். அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அந்த உறவில் சின்ன விரிசல் ஒன்று விழ ஆரம்பித்து அது நாளடைவில் பெரிதாக மாறியது.
பிரிவை அறிவித்த ரவி: கண்டிப்பாக இந்த பிரச்னை சரியாகிவிடும் என்று குடும்பத்தினரும், நண்பர்களும் நினைத்த சூழலில்; தான் ஆர்த்தியை பிரிவதாகவும்; தன்னுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தீவிரமாக யோசித்து இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கடந்த வருடம் அறிவித்து ஷாக்கை கொடுத்தார் ரவி. ஆனால் முடிவு குறித்து தன்னிடம் எதுவும் ஆலோசிக்கவே இல்லை; ரவியிடம் பேச எடுத்த முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்தன என்று ஆர்த்தி கூறியிருந்தார்.

என்ன காரணம்?: இந்த விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போனதை அடுத்து ஒரு அறிக்கை வெளியிட்ட ரவி, 'தன்னை ஆர்த்தியின் தரப்பு கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும்; வீட்டு வேலைக்காரர்களுக்கு கிடைக்கும் மரியாதைகூட தனக்கு கிடைக்கவில்லை' என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி ஆர்த்தியின் தாய் சுஜாதாவைத்தான் அவர் நேரடியாக அட்டாக் செய்திருந்தார். ரவி தன்னை அட்டாக் செய்ததை அடுத்து எமோஷனலாக அறிக்கை வெளியிட்ட சுஜாதா; உங்களை மகனாக நினைக்கிறேன் என்று உருக்கமாகவும் பேசியிருந்தார்.
கெனிஷாவுடன் நெருக்கம்: இப்படி மாற்றி மாற்றி அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருப்பதை பார்த்த நீதிமன்றம்; இனி யாரும் அறிக்கை வெளியிடக்கூடாது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றது. இதற்கிடையே இந்த பிரிவுக்கு காரணமே கெனிஷாதான். அவருடன் நெருங்கி பழகிய பிறகுதான் ஆர்த்தியை பிரியும் முடிவுக்கு ரவி சென்றார் என்று பேச்சுக்கள் எழுந்தன. முதலில் அதை திட்டவட்டமாக மறுத்தார் ரவி. ஆனால் அந்தப் பேச்சின்படிதான் இரண்டு பேரும் நெருங்கி பழகுகிறார்கள்.
கெனிஷாவின் ஸ்டோரி: ரவி மோகன் ஸ்டூடியோ தொடக்க விழாவில்கூட அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தார் கெனிஷா. ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு இரண்டு பேரும் ஒன்றாக சென்றுவருகிறார்கள். இந்நிலையில் கெனிஷா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரி வைத்திருக்கிறார். அதாவது அவர் ஒரு வெளிநாட்டில் காரில் சென்றுகொண்டிருக்கிறார். ரவி மோகன் நடித்த எங்கேயும் காதல் பாடல் அந்த காருக்குள் ஒலிக்கிறது. அந்த வீடியோவை பகிர்ந்திருக்கும் அவர் அதற்கு கேப்ஷனாக நான் எங்கே சென்றாலும் என் மனதில் நீதான் என்று காதலோடு குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ரவியை நினைத்து இப்படி ஃபீல் செய்றாரோ என்று கமெண்ட்ஸ் செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications











