பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் உடன் ரவி மோகன்.. ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமண விழாவில் பங்கேற்பு!
சென்னை: ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவுக்கும் லஷ்வின் குமார் என்பவருக்கும் இன்று ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என இந்த திருமணத்தில் பலர் பங்கேற்றுள்ளனர். நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை சமீபத்தில் ரவி மோகன் என மாற்றிக் கொண்ட நிலையில், பாடகி கெனிஷாவுடன் திருமண விழாவில் பங்கேற்றுள்ளார்.
நடிகர் ரவி மோகன் ஆர்த்தியை திருமணம் செய்துக்கொண்டு 2 மகன்களை பெற்றுள்ளார். ஆனால், கடந்த ஆண்டு மனக்கசப்பு காரணமாக ரவி மோகன் திடீரென மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், ரவியிடம் தன்னை பேசக்கூட அனுமதிக்கவில்லை என்றும் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் ஆர்த்தி தனது விருப்பத்தை தெரிவித்த நிலையிலும், ரவி மோகன் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த விவாகரத்துக்கே காரணம் பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் தான் என கிசுகிசுக்கள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
ஐசரி கணேஷ் மகள் திருமணம்: நேற்று முன் தினம் லீலா பேலஸ் ஹோட்டலில் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவின் திருமண சங்கீத் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் சூர்யா தனது ரெட்ரோ படத்தின் சக்சஸ் மீட்டை அதே இடத்தில் நடத்திய நிலையில், அவரும் பங்கேற்று மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். மேலும், ரெட்ரோவின் கனிமா பாட்டுக்கும் மணமக்கள் நடனமாடியதை சூர்யா கண்டு ரசித்தார். இந்நிலையில், இன்று ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று வருகிறது. பல சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

மணிரத்னம் முதல் பிரபு வரை: இயக்குநர் மணிரத்னம், நடிகர் பிரபு, விக்ரம் பிரபு, ரவி மோகன், பாடகி கெனிஷா, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் இந்த திருமண விழாவில் பங்கேற்ற நிலையில், அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ரவி மோகனுடன் அருகே இருக்கும் பெண் யார் என பலரும் கேள்வி எழுப்ப அவர் வேறு யாருமில்லை பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் தான் என்பது வெளிச்சமாகியுள்ளது.

ஒரே சோபாவில் மேட்சிங் மேட்சிங் டிரெஸ்: ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் இருவரும் சந்தனக் கலர் உடையை அணிந்துக் கொண்டு ஒரே சோபாவில் அமர்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளன. விவாகரத்து சர்ச்சை வெடித்த நிலையில், இருவருக்கும் இடையே சம்மந்தம் இல்லை என்பது போல கூறப்பட்ட நிலையில், இப்போ திருமணத்துக்கு இருவரும் மேட்சிங் மேட்சிங் உடையில் புது ஜோடி போலவே வந்திருக்காங்களே என்ன விஷயம் என கேள்விகள் கிளம்பியுள்ளன.
இணைந்து பயணிக்கிறாரா?: ஏற்கனவே பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் உடன் தான் இணைந்து பயணிப்பதாகவும் இருவரும் நண்பர்கள் என்றும் ரவி மோகன் கூறியிருந்தார். ஆனால், இருவரும் இப்படி ஜோடி போட்டு ஒரே சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு போஸ் கொடுப்பதை பார்த்த ரசிகர்கள் சீக்கிரமே ஸ்பெஷல் நியூஸ் சொல்ல தயாராகி விட்டாரா ரவி மோகன் அதற்குத்தான் இப்படி வந்துள்ளாரா என ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன. ரவி மோகன் நடிப்பில் ஜீனி, கராத்தே பாபு உள்ளிட்ட படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











