சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ்... குமரனா - ரஜினியா பாப்போம் மக்கா.. டபுள் ட்ரீட்!

சென்னை: டாப் ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படங்கள் சமீபகாலமாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. கடந்தாண்டு கில்லி, முத்து, ஆளவந்தான் போன்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தினை இன்றைய இளையதலைமுறையினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதையடுத்து, சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியாரது சூப்பர் ஹிட் படங்கள் ஒரே நாளில் ரீ ரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்: கிராமத்து இளைஞர்களுக்கு இருக்கும் குசும்பும், ஊருக்குள் இருக்கும் பெரிசுகளை சொரண்டிவிடுவது என லொள்ளுத்தனங்களோடு ரசிகர்களை குதூகலப்படுத்திய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயன் - சூரி காம்போவில் வெளிவந்து மெஹா ஹிட் அடைந்தது. சிவகார்த்திகேயன் கரியரில் இப்படம் மிக முக்கியமான படமாக அமைந்தது. படம் முழுக்க சிரிப்பு சரவெடிதான்.

M kumaran Son of mahalakshmi Re release Rajinimurugan

காக்கி சட்டை: காமெடி, காதல் என வலம் வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக ஒரு ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கி சுமாரான வெற்றியை பெற்றார். மருத்துவத்தில் நடக்கும் க்ரைம் கதையை மிக அழகாக செந்தில் துரைகுமார் சொல்லியிருப்பார். காமெடி, ஆக்சன் என சிவகார்த்திகேயன் பட்டையை கிளப்பியிருப்பார்.

ஜெயம்: எல்லோருக்கும் ஹீரோவாக அறிமுகம் ஆன முதல் படமே மெஹா ஹிட் படமாக அமைவதில்லை. அப்படி விரல் விட்டு எண்ணும் நடிகர்களில் ஜெயம் ரவி.. சாரி ரவி மோகனும் ஒருவர். ரவி என்ற பெயருக்கு பின்னால் அடைமொழி கொடுத்த படம் ஜெயம். காதலியை கரம் பிடிப்பது தான் கதை. அதை மிக ஆழமான நடிப்பிலும், வீட்டின் அந்தரத்தில் கயிறு கட்டி காதலியை பார்க்க சென்று கவிதையே தெரியுமா என்று பாட்டோடு ரசிகர்களை மெய்மறக்க செய்த படம் ஜெயம். இப்படம் 100 நாட்களுக்கு மேல் வெற்றி வாகை சூடியது.

பராசக்தி: சிவகார்த்திகேயனும், ரவிமோகனும் மெஹா ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரீட் தர காத்திருக்கின்றனர். பராசக்தி படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு முக்கிய கதாப்பாத்திரம் என கூறப்படுகிறது. இந்தி எதிர்ப்பை மையப்படுத்தி உருவாகும் படம் என்பதால் பெரும் ஆவலுடன் பராசக்தி படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், இருவரும் நடித்த 2 படங்கள் வரும் மார்ச் 14இல் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நாள் கொண்டாட்டம் ஜாஸ்தியாக இருக்கும்.

ரீ ரிலீஸ்: பொன்ராம் இயக்கிய ரஜினிமுருகனும், மோகன் ராஜா இயக்கிய எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படமும் ஒரே நாளில் ரீ ரிலீஸில் மோதவுள்ளன. இயக்குநர் மோகன் ராஜா தனது எக்ஸ் தளத்தில் எம் குமரன் சன்-ஆப் மகாலட்சுமி படம் ரீ ரிலீஸ் ஆவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இப்படம் தெலுங்கில் வெளியாகி மெஹாஹிட்டானது. இதனை தமிழில் மோகன் ராஜா ரீமேக் செய்திருந்தார். தமிழிலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அம்மா சென்டிமெண்ட், காதல் காட்சிகளில் ரவிமோகன் ரசிகர்களை உருக வைத்திருப்பார். பாக்ஸிங் காட்சிகளை பார்த்து சில்லறையை சிதறவிட்டனர் ரசிகர்கள்.

விவேக் காமெடி: எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் விவேக்கின் காமெடி சீன்கள் வேறு ரகத்தில் இருக்கும். அசினுக்கு தமிழில் முதல் படம், நதியாவிற்கு தமிழில் ரீ என்ட்ரி என பல சுவாரஸ்யங்கள் இப்படத்தில் இடம்பிடித்திருக்கின்றன. சென்னை செந்தமிழ், வச்சுக்க வச்சுக்கவா என்ற குத்துப்பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X