Bro Code Promo: ரவி மோகன் தயாரித்த முதல் படம்.. முதல் படத்துலயே பொண்டாட்டி கொடுமையா?
சென்னை: நடிகர் ரவி மோகன் தனது பெயரில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த ஸ்டூடியோஸின் திறப்பு விழா நேற்று அதாவது ஆகஸ்ட் 26ஆம் தேதி மிகவும் பிரமாண்டமான முறையில் தொடங்கப்பட்டது. இந்த விழாவில் ரவி மோகன் குடும்பத்தைக் கடந்து சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, ரவி மோகனின் தோழியும் பாடகியுமான கெனிஷா என பலரும் கலந்து கொண்டார்கள். இப்படி இருக்கையில் இவரது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு குறிப்பாக ரியாலிட்டி ஷோக்களுக்குத்தான் ப்ரோமோக்கள் ரிலீஸ் செய்யப்படும். பிக் பாஸ் போன்ற அதிமான ரசிகர்கள் பார்க்கும் ரியாலிட்டி ஷோவுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று ப்ரோமோக்களும் அதிகபட்சம் நான்கு ப்ரோமோக்களும் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. ஆனால் படங்களுக்கு எப்போதும் டீசர் மற்றும் டிரைலர் வெளியிடுவதுதான் வழக்கம். ஆனால் ரவி மோகன் ஸ்டூடியோஸில் தயாரிப்பில் உருவாகியுள்ள ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ இன்று வெளியிடப் பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி, எழுதி இயக்கி உள்ளார்.

படக்குழு: படத்தில் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா அர்ஜுன் அசோகன், இயக்குநர் பேரரசு, உபேந்திரா, கௌரி பிரியா, ஷர்தா ஸ்ரீநாத் மாளவிகா மனோஜ், ஐஸ்வர்யா ராஜ் என பலரும் இணைந்து நடித்துள்ளார்கள். ப்ரோமோவை பார்க்கும்போது, என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா என்று ஜாலியாக இருக்கும் கணவர்களின் மனநிலையை பிரதிபலிப்பது போல உள்ளது.
வாழ்த்து: இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக ப்ரோமோவில் இடம் பெற்றுள்ள இளையராஜாவின் பாடல் பலருக்கும் படத்தின் கதையை ஊகிக்க வைக்கும் படியாக உள்ளது என கமெண்ட் அடித்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் எஸ்.ஜே. சூர்யாவுக்கு கெட்டப் மிகவும் சிறப்பாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். ப்ரோமோ மொத்தம் 5 நிமிடங்கள் 15 நொடிகளுக்கு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பலரும் ப்ரோமோவை பார்த்துவிட்டு படம் வெற்றி பெற வாழ்த்துகள் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications