Ravi Mohan: பணத்தாசை?.. 10 நாட்களுக்கு முன் ரவி மோகனை கட்டாயப்படுத்திய ஆர்த்தியின் அம்மா.. எதுக்கு தெரியுமா?

சென்னை: கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு குறித்துதான். கடந்த ஆண்டே விவாகரத்து குறித்து அறிவித்து, நீதிமன்றத்தில் விண்ணப்பித்தும் விட்டார்கள். இப்படியான நிலையில் திடீரென அவர்கள் குறித்த விவாதம் அதிகமாக காரணம் ரவி மோகன் தனது தோழி கெனிஷா உடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது என்று பரவலாக பேசிவருகிறார்கள்.

ரவி மோகன் அவரது தோழியுடன் வந்ததால், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று சிலர் வதந்திகளை கிளப்பி விட்டனர். அந்த தருணத்தில் ஆர்த்தி, ரவி மோகனை கடுமையாக விமர்சித்து நீண்ட நெடிய அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் இவர்கள் குறித்த பேச்சு தீவிரமடைந்தது. இணையவாசிகள் பலரும் ரவி மோகனை இணையத்தில் அட்டாக் செய்தனர். இந்நிலையில் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்த்தி மற்றும் அவரது தாயார் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

அதாவது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சினிமா உலகில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும், நான் கடந்த சில ஆண்டுகளாக என்ன மாதிரியான நெருக்கடிகளை எதிர் கொண்டேன் என்று. திரைக்குப் பின்னால் நடந்த இறக்கமற்ற செயல்கள் குறித்து நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும். ஒரு வருடத்திற்கு முன்னால், எனது முன்னாள் மனைவியின் தாயாரின் பல கோடிகள் ரூபாய் கடனுக்கு நான் தான் உத்தரவாதம் அளித்து கையெழுத்துப் போடும் கட்டாயத்திற்கு என்னைத் தள்ளினார்கள்.

Ravi Mohan Slams Aarti And Her Mother Forced To Act In Movie 10 Days Before

10 நாட்களுக்கு முன்னர்: இது மட்டும் இல்லாமல், 10 நாட்களுக்கு முன்னர் எனது முன்னாள் மனைவியின் தயார் என்னை அழைத்து படத்தில் நடிக்கச் சொல்லி வற்புறுத்தினார். அதுவும் நான் கொடுத்த உத்திர வாதத்திற்கு ஈடு செய்வதற்காக என்னை படத்தில் நடிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டார். நான் மறுத்துவிட்டேன். இதுதான் எனது முன்னாள் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தின் மனப்போக்கு. எப்போது பணம், பணத்திற்கு உத்திரவாதம், கையெழுத்து என்று தேவைப்படுகிறதோ, அதற்குத்தான் அவர்களுக்கு ரவி மோகன் என்ற பெயர் தேவைப்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளாக நான் இப்படியான நிம்மதியற்ற வாழ்வைத்தான் வாழ்ந்து வருகிறேன்.

Take a Poll

மீண்டு வருவேன்: இப்படியான நெருக்கடியான வாழ்க்கையில் இருந்து வெளியே வந்துள்ள நான் பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு எழுவேன் என்று நம்பிக்கை உள்ளது. நான் முதல் படியில் இருந்து எனது வாழ்க்கையைத் தொடங்க தயாராக இருக்கிறேன். கடவுள் என்னை ஒவ்வொரு நாளும் வழிநடத்துவார் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக பொது வெளியில் ஒரு கணவனாகவும் அப்பாவாகவும் என்னைப் பற்றி பல அவதூறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.


வழிப்பறி: அதற்கு காரணம் எனது முன்னாள் மனைவி மற்றும் அவருக்கு விஷமத்தனமான அறிவுரைகளைக் கூறும் மென்டார்கள், கேவலமான பி.ஆர் வேலைகள் எல்லாம் நான் அவர்களை பொருளாதார ரீதியாக நெருக்கடிக்குத் தள்ளியுள்ளேன் என்று பொய் சொல்லி வருகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்யாதீர்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துகளில் பாதியை நீங்களும் உங்களது அம்மாவும் இணைந்து என்னிடத்தில் வழிப்பறி செய்வது போல் வற்புறுத்தி பிடுங்கிக் கொண்டீர்கள்" என்று தெரிவித்துள்ளார். ரவி மோகனின் இந்த அறிக்கை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X