ஆர்த்தி ரவியின் காதலர் தின கொண்டாட்டம்.. அட சூப்பரா கொண்டாடிருக்காங்க ப்பா.. வேற லெவல்
சென்னை: நடிகர் ரவி மோகன் ஆர்த்தி என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மகன்களையும் பெற்றார்கள். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு ஆர்த்தியை பிரிவதாக ரவி அறிவித்தார். இதை எதிர்பார்க்காத ஆர்த்தி அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்தார். ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனையடுத்து வேறு வழியின்றி ரவியின் முடிவுக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தார்.
ஜெயம் ரவியாக திரைத்துறைக்குள் வளர்ந்த ரவி இப்போது ரவி மோகனாக இருக்கிறார். அவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். முதலில் இந்தக் காதலுக்கு ரவியின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. நடிகை குஷ்பூ தலையிட்டு பேசி சம்மதம் வாங்கி தந்தார். திருமணத்துக்கு பிறகு ஆர்த்தியும், ரவியும் பெஸ்ட் ஜோடியாக வலம் வர ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்களும் பிறந்தார்கள்.
பிரிவை அறிவித்த ரவி: பத்து வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்தார்கள். சூழல் இப்படி இருக்க திடீரென சில வருடங்களுக்கு முன்பு ரவி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், 'தன்னுடைய எதிர்கால நலனை கருதி ஆர்த்தியை பிரிகிறேன்' என குறிப்பிட்டிருந்தார். அது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முக்கியமாக ஆர்த்திக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் தன்னிடம் ஆலோசிக்காமலேயே இந்த முடிவை அவர் எடுத்துவிட்டதாக ஆர்த்தி கூறினார்.

அறிக்கை போர்: தொடர்ந்து ஆர்த்தி, அவரது தாய், ரவி மோகன் ஆகியோர் மாறி மாறி அறிக்கைகள் வெளியிட்டுக்கொண்டு தங்கள் தரப்பு விஷயங்களை பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒருகட்டத்தில் இந்த அறிக்கை போர் ஓவர் டோஸ் ஆனதை அடுத்து நீதிபதியே தலையிட்டு இனிமேல் அறிக்கையெல்லாம் வெளியிடாதீர்கள் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றது. ரவியுடன் எப்படியாவது மீண்டும் சேர்ந்து வாழ்ந்துவிட வேண்டும் என முயற்சி செய்தார் ஆர்த்தி.
ஜீவனாம்சம் கேட்ட ஆர்த்தி: ஆனால் ரவி கொஞ்சம் கூட இறங்கி வருவதாக இல்லை. எனவே வேறு வழியின்றி இந்த முடிவுக்கு உடன்பட்டார் ஆர்த்தி. மேலும் தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக ரவி மோகன் வழங்க வேண்டும் என ஒரே போடாக போட்டார். அதை பார்த்த பலரும், இதெல்லாம் ஓவர். மாதம் 40 லட்சம் ரூபாயா அடேங்கப்பா என்று வாயை பிளந்தார்கள். ஆர்த்தியுடனான பிரிவுக்கு பிறகு கெனிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார் ரவி.
ஆர்த்தி சிங்கிள்தான்: ஆர்த்தியை பொறுத்தவரை சிங்கிளாகத்தான் இருக்கிறார். தனது இரண்டு மகன்களையும் கண்ணும் கருத்துமாக வளர்ப்பதில் கவனம் செலுத்திவருகிறார். அவ்வப்போது ரவி பற்றி மறைமுகமாக தாக்கி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதோடு சரி. அதேசமயம் ரவியும், கெனிஷாவும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது, நிகழ்ச்சிகளுக்கு செல்வது என பிஸியாக இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.
ஆர்த்தியின் போஸ்ட்: அதனையொட்டி ஆர்த்தி தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து காதலர் தின போஸ்ட் போட்டிருந்தார். அதில், "வீட்டையே நாம்தான் ஓட்டுகிறோம் என்று நம்பும் மூன்று பசங்க. அவர்கள்தான் எனக்கு பாதுகாப்பு படையினர் போல் நடிக்கிறார்கள். சில நாட்கள் சிரிப்பு, சண்டை, பாதுகாப்பான அணைப்புகள் இருக்கின்றன. இவைதான் வீட்டை அழகான வீடாக மாற்றுகின்றன" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











