ரவி மோகன் வீட்டில் குறை பிரசவ குழந்தை.. ரொம்ப வேதனைப்படுறாரு.. கோரிக்கையும் வெச்சிருக்காரு

சென்னை: ரவி மோகன் தான் திருமணம் செய்திருந்த ஆர்த்தியை பிரிந்திருக்கிறார். விரைவில் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைக்கவிருக்கிறது. ஆர்த்தியை பிரிந்த அவர் பின்னணி பாடகியான கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்துவருகிறார். விரைவில் அவர்களுக்கு திருமணம் நடந்தாலும் நடக்கலாம் என்று தெரிகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரவி மோகன் எமோஷனலாக ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஆர்த்தி என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ரவி மோகன் இரண்டு மகன்களுக்கு தந்தையாக இருக்கிறார். நிம்மதியாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் திடீரென விழுந்த விரிசல் நாளடைவில் பெரிதாக மாறியது. அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ரவியோடு சேர்ந்து வாழ ஆர்த்தி விரும்பினாலும் அதற்கு ரவி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

கெனிஷாவுடன் நெருக்கம்: இதன் காரணமாக வேறு வழியின்றி ஆர்த்தியும் இந்த விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் மாதம் 40 லட்சம் ரூபாய் தனக்கு ஜீவனாம்சமாக தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இது ஒருபக்கம் இருக்க பின்னணி பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் நெருக்கமாக பழகிவருகிறார். இரண்டு பேரும் சேர்ந்து பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வருகிறார்கள்.

Ravi Mohan spoke emotionally while participating in an awareness program on premature babies
Photo Credit:

ரவி மோகன் பேச்சு: விரைவில் அவர்களது திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குறை பிரசவ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரவி பேசுகையில், "எங்களுடைய குடும்பத்திலும் ஒரு குறை பிரசவ குழந்தையை பார்த்திருக்கிறோம். ஒரு பேச்சுக்கு அப்படி சொன்னாலும் அது அவர்களை ரொம்பவே பாதிக்கும். இதில் நிறைய மூட நம்பிக்கைகள் இருக்கின்றன.

குறையே கிடையாது: இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகுதான் குறை பிரசவம் என்பது ஒரு குறையே கிடையாது என்ற விஷயம் புரிகிறது. எனவே குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதை தடுப்பதற்கு மருத்துவர்கள் சொல்லும் அறிவுரையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறந்தால் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் எந்த வார்த்தையையும் பயன்படுத்த வேண்டாம். குறை பிரசவத்தில் பிறந்தவனே என்று விளையாட்டுக்குக்கூட சொல்ல வேண்டாம்" என்றார்.

ரவியின் கரியர்: ரவியின் கரியரை பொறுத்தவரை அவரது நடிப்பில் அடுத்ததாக ப்ரோ கோட், ஜீனி ஆகிய இரண்டு படங்கள் வரவிருக்கின்றன. இவற்றில் ப்ரோ கோட் பெயரை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளராகவு மாறி ஸ்டூடியோ ஒன்றையும் தொடங்கியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X