மாமியாருக்கு போட்டியாக களமிறங்கிய ரவிமோகன்.. தோழி கொடுத்த தைரியம்.. நாளைக்கு தரமான சம்பவம்!

சென்னை: கெனிஷா பாட்டுப்பாடி பிரபலமானதை விட, ரவி மோகனுடன் ஐசரி கணேஷ் மகளின் திருமணத்தில் கலந்த கொண்டு பிரபலமாகி விட்டார். சமீகாலமாக இணையத்தில் பேசப்படும் விஷயமாக ரவி மோகன், கெனிஷாவின் நட்பு இருக்கும் நிலையில், தற்போது இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டு பிரிந்தார். . அந்த அறிக்கையை தொடர்ந்து ரவி தனது பிறந்த நாளன்று நீதிமன்றத்தில் மனைவி இடம் இருந்து விவகாரத்து கோரி இருந்தார். இதைத்தொடர்ந்து ஆர்த்தி ரவி, தனது instagram பக்கத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமலேயே, ரவி மோகன் தன்னிச்சையாக விவாகரத்து செய்யும் முடிவை எடுத்து இருப்பதாகவும், அவரை சந்தித்து பேச வேண்டும் என அறிக்கை வெளியிட்டு இருந்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நேரத்தில், ஐசரி கணேஷ் அவர்களின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகன் தன்னுடைய தோழி கெனிஷாவுடன் வந்திருந்தார். அது மட்டுமல்லாமல் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்ததும், கெனிஷாவின் கையை பிடித்த படி ரவி அழைத்து சென்றதும் சர்ச்சையாக பேசப்பட்டது.

Ravimohan Aarthi kenishaa
Photo Credit:

திருப்பதியில் சாமி தரிசனம்: நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் நெருக்கமாக இருப்பது சினிமா வட்டாரத்தில் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. இருவரும் இதுவரை தங்கள் உறவு பற்றி வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை என்றாலும், இசை நிகழ்ச்சி, வெளிநாட்டுப் பயணம், கோவிலுக்கு செல்வது என எதுவாக இருந்தாலும் சேர்ந்தே சென்று வருகின்றனர். இந்நிலையில், ரவி மோகன் நாளை "Ravi Mohan Studios" என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருக்கிறார். இந்த தயாரிப்பு நிறுவனம் நல்ல படியாக செல்ல வேண்டும் என்பதற்கான ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் இன்று திருப்பதியில் சாமி தரிசணம் செய்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

கைவசம் உள்ள படம்: நடிகர் ரவி மோகன் தற்போது 'ஜினி' திரைப்படத்திலும், கரத்தே பாபு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பரசக்தி' திரைப்படத்தில் முதன்முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார் ரவி மோகன். மேலும், கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் 'புரோ கோட்' படத்தை ரவிமோகனின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Read more about: aarthi கெனிஷா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X