என்னை முதலில் நேசித்தீர்கள்.. அவள் உங்களுக்கு மீண்டும் வேண்டும்.. ஆர்த்தி ரவி உருக்கம்

சென்னை: ரவி மோகனும் ஆர்த்தியும் சில காரணங்களால் பிரிந்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் அவர்களது விவாகரத்து மனு விசாரணையில் இருக்கிறது. விரைவில் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைக்கும் என்றே பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு மாதா மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என்று ஆர்த்தி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் ஆர்த்தி உருக்கத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை ரவி மோகன் காதலித்து கடந்த ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இரண்டு ஆண் குழந்தைகளை பெற்று சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை இப்போது பிரிவில் இருக்கிறது. விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றிருக்கும் ரவி; ஆர்த்தியை பிரிவதில் உறுதியாக இருக்கிறார். ஆர்த்தியும் மாதா மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்.

40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம்: ஆர்த்தியின் அந்த கோரிக்கை விமர்சனத்தை சந்தித்தது. இவ்வளவு பணம் ஜீவனாம்சமா என்று பலரும் வாயை பிளந்திருக்கிறார்கள். அதேசமயம் ரவி இவ்வளவு கொடுக்கமாட்டார் ஆனால் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஒத்துக்கொண்டு ஆர்த்தியை பிரிவது பிரிவதுதான் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்றும் திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது. இந்நிலையில் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தி தனது தந்தை குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

Ravi Mohan s Ex Wife Aarti Ravi posts a heartfelt message on Father s Day
Photo Credit:

ஆர்த்தியின் போஸ்ட்: அந்தப் பதிவில் அவர், "என்னை முதலில் நேசித்த மனிதருக்கு.. இன்னும் நேசித்துக்கொண்டிருக்கிறார். சில வார்த்தைகள் அன்றாட பயன்பாட்டில் கொண்டு வருவது கடினமானது. ஆனால் இன்று நான் அதனை முயற்சி செய்கிறேன். என்னை சுற்றி நிறைய விஷயங்கள் நிச்சயமற்றது என்பதை நான் உணர்ந்தபோது நீங்கள் மட்டும் உறுதியாக இருந்தீர்கள். நான் எப்படி கடந்து செல்வது என்று எனக்கு தெரியாத நாட்களும் இருந்தன.

பலமாக நின்றீர்கள்: நீங்கள் அப்போதெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. நீங்கள் என் பக்கத்தில் அமைதியாகவும், உறுதியாகவும், பலமாகவும் நின்றீர்கள். நான் ஒரு காலத்தில் அலட்சியமாக எடுத்துக்கொண்டதை இப்போது பார்க்கிறேன். நீங்கள் எப்போதும் கேட்காமலேயே வந்த விதம். எந்த சத்தமும் இல்லை. புகழும் இல்லை. நீங்கள் மட்டும்தான் இருந்தீர்கள். குழந்தைகள் அவர்கள் என்ன பார்க்கிறார்களோ அதைத்தான் பிரதிபலிக்கும் என சொல்வார்கள்.

அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்: அதேபோல் எனது மகன்கள் இன்னும் உலகத்தை புரிந்துகொள்ள முயலும்போது அவர்கள் முக்கியமான ஒன்றை கற்றுக்கொள்கிறார்கள் என எனக்கு தெரியும். நிபந்தனைகள் இல்லாமல் எப்படி நேசிப்பது என்பதை கற்கிறார்கள். நீங்கள் என்னை மட்டும் வளர்க்கவில்லை எல்லா வழிகளிலும் அவர்களையும் வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு காலத்தில் நீங்கள் என்னை நம்பிக்கையுடன் போகவிட்டீர்கள். ஆனால் இப்போது அதே பெண் நானில்லை என்பதும் எனக்கு தெரியும்.

என்னை சோதித்திருக்கிறது: நாம் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் வாழ்க்கை என்னை சோதித்துவிட்டது.நீங்கள் அவளைத்தான் திரும்ப பெற விரும்புவதாகவும் எனக்கு தெரியும். அவள் முன்பு இருந்ததை போன்றே அவளை மீண்டும் கண்டுபிடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நான் உங்களிடம் சிறிய பெண்ணாகவே மீண்டும் வருவேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த உருக்கமான பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X